
yogibabu with prithiv in molllywood
பிரபல நடிகருடன் மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் யோகி…!!!
Yogi to make Malayalam entry with popular actor…!!!
யோகிபாபு தமிழ் திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோவுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார். யோகிபாபுவின் இயல்பான நடிப்பிற்கு நிறைய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவருடைய காமெடி உண்மையில் அனைவரையும் எளிதில் கர்வந்திடும் வகையில் இருக்கும். தமிழில் நிறைய படங்கள் வரிசையாக ஒப்பந்தம் செய்துள்ளார் யோகி. இந்த நிலையில் தமிழை தாண்டி பாலிவுட்டிலும் மற்றும் மாலிவுட்டிலும் நடிக்க போகிறார். ஆம், தற்போது இயக்குனர் அட்லீ அவர்கள் ஹிந்தியில் பிரபல நடிகரான சல்மான்கானை வைத்து “ஜவான்” என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் யோகிபாபு அவர்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என இயக்குனர் அட்லீ கூறியுள்ளார். அதையடுத்து தற்போது யோகி அவர்கள் மலையாளத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
மலையாளத்தில் பிரபல நடிகரான ப்ரிதிவுடன் இணைந்து முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் யோகி. மலையாளத்தில் தற்போது வெளியாகி அதிக வசூலை பெற்ற “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” என்ற படத்தை இயக்கிய விபின் தாஸ் அவர்கள் தான் அடுத்த படமான “குருவாயூர் அம்பலநடையில்” என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பாகத் பாசில் ஹீரோவாக, ப்ரித்திவ் ராஜ் வில்லனாக நடிக்க போவதாக தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தின் முக்கிய காதாபாத்திரத்தில் யோகி நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது. மலையாளத்தில் முதல் படமே நல்ல இயக்குனரின் படமாக யோகி பாபுவுக்கு அமைந்துள்ளது. யோகியின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய இயல்பான நடிப்பு மற்றும் திறமை தான் முக்கிய காரணம் .