திடீர் தகவல் ரஜினி ஏன் தன் கட்சி பெயரை அறிவிக்க தாமதிக்கிறார் ?? தாமதத்திற்கு காரணம் பயமா!!!

போர் வரும்போது சந்திப்போம் என தேர்தலை குறித்து சொல்லியுள்ள ரஜினிகாந்த் தன் அதிரடி அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டாலும், இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை.  அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் விரைவில் தமிழகம் திரும்பி மே 9ல் நடைபெறும் காலா இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீன் மாதம் முதல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.  படத்தின் சூட்டிங் ஜீலை இறுதிக்குள் முடிந்துவிடும். 2019ல் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினி தன் அரசியல் பிரவேசத்திற்கு பலமான அடித்தளம் அமைக்கும் வகையில் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  ‘பாட்ஷா’ போல ஒரு மாஸ் படம் கொடுத்துவிட்டு அரசியலுக்குள் இறங்கினால் தன் பலம் இன்னும் பல மடங்கு தூக்கி நிறுத்தும் என நினைக்கிறார் போல. எனவே அப்படத்தை பெரிய டைரக்டர்கள் கையில் கொடுத்தால்  நன்றாக இருக்கும் என்பதால்  கமர்ஷியல் மற்றும் தரமான ஹிட்டுகளை கொடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தேர்ந்தெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

2002-ம் ஆண்டு விஜயகாந்துக்கு இவர் கொடுத்த ‘ரமணா’ இன்று வரை பேசப்படுகிறது. மேலும் துப்பாக்கி, கத்தி என சமூகம் சார்ந்த கதைகளையும் முருகதாஸ் கொடுத்துள்ளார்.

ரமணா படத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு, துப்பாக்கி படத்தில் ஐ யம் வெய்ட்டிங், தீனா படத்தில் தல ஆகிய பவர்புல்லான பன்ச்கள் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரை இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறது. எனவே ரஜினிக்கும் சரியான பன்ச் டயலாக்குகளை முருகதாஸ் நிச்சயம் கொடுப்பார். மற்ற ஹீரோக்கள் பேசிய அதே வசனங்களை ரஜினி பேசுகையில் அதன் வீரியம் எப்படி இருக்கும்? என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். இதையெல்லாம் யோசித்துதான் அரசியல் என்ட்ரி அரங்கேறும் நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்த்து ஒரு படம் செய்ய தயார் ஆகியிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

அமெரிக்கா செல்லும் முன்னே, ஒரு தனிமையான ஒரு இடத்தில் ரஜினியும் ஏ.ஆர்.முருகதாஸும் சந்தித்து பேசிவிட்டார்கள் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுப்படுகிறது. தற்போதைய அரசியல் நடப்புகளை மையமாக வைத்து ஒரு கதையை தயார் செய்ய ரஜினி கூறியதாகவும், 10 ரமணா சேர்ந்தது போல பவர்ஃபுல்லான கதையுடன் விரைவில் வருகிறேன்’ என முருகதாஸ் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

‘விஜய் 62’ படத்தை முடித்துவிட்டு முருகதாஸ்ம் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு ரஜினியும் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட அவர் நாடாளுமன்ற தேர்தலை குறி வைக்கவில்லை. அவரது ஒரே குறிக்கோள் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல்தான். எனவே தேர்தல் வரும்முன் தன் படங்களை முடித்துவிட்டு அரசியல் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றவிருக்கிறாராம்.