
ethirneechal serial aathigunasekaran replacement
சன் டிவி எதிர்நீச்சல் தொடரின் அடுத்த ஆதிகுணசேகரன் யார் தெரியுமா??
Do you know who is the next Adigunasekaran of Sun TV Counter-ethirneechal serial??
சன்-டிவியில் டிஆர்பி ரேட்டிங்-இல் முதல் இடத்தில உள்ள நாடகம் எதிர்நீச்சல் தொடர் தான். எதிர்நீச்சல் தொடரின் முக்கியமான காதாபாத்திரம் ஆதி குணசேகரன் என்ற காதாபாத்திரம் தான். இக்கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து அவர்கள் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். அவருக்காகவே மக்கள் இத்தொடரை விரும்பி பார்க்கின்றனர். மாரிமுத்து அவர்கள் ஆதிகுணசேகரனாக எல்லோர் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர். திடிரென்று, மாரிமுத்து அவர்கள் மாராடைப்பால் உயிரிழந்தார். அவருடைய இழப்பு அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் அனைவரும் மிகவும் வருந்தினர். மாரிமுத்து அவர்கள் இயக்குனராக, நடிகராக, எழுத்தாளராக இருந்துள்ளார். அவர் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் அனைவரின் மனதிலும் ஆதி குணசேகரனாக வாழ்ந்து வந்தார். அவருடைய இழப்பால் சினிமா துறையை சார்ந்த அனைவருமே மிகவும் வருந்தினார்.
தற்போது, எதிர்நீச்சல் நாடகத்தில் ஆதிகுணசேகரன் காதாபாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி அவர்கள் நடிக்க போவதாக தகவல் வெளிவந்தது. இது குறித்து நடிகர் வேல ராமமூர்த்தி கூறியது என்னவென்றால் ?? நான் மாரிமுத்து அவரின் நெருங்கிய நண்பன். மாரிமுத்து சிறந்த நடிகர், சிறந்த மனிதர். அவருடைய இழப்பு எனக்கே பெரும் அதிர்ச்சியாக தான் உள்ளது. அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் தொடரில் அவருடைய காதாபாத்திரத்தில் நடிக்க சன் டிவி குழு என்னை தொடர்பு கொண்டு கேட்டது உண்மை தான். பேச்சு வார்த்தையில் தான் உள்ளது. நான் நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளதால் , இன்னும் ஆதி குணசேகரன் காதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் பேசிச்சு வார்த்தையில் தான் உள்ளது. மேலும், ஆதி குணசேகரன் காதாபாத்திரத்தில் நடிக்க எனக்கும் ஆசை உள்ளது. ஆனால், மாரிமுத்து அவரின் நடிப்பிற்கு ஈடாக என்னால் நடிக்க முடியுமா?? என்று தெரியவில்லை. விரைவில் முடிவு தெரிந்து விடும் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்று. யார் வந்தாலும் மாரிமுத்து அவரின் நடிப்பிற்கு ஈடாகுமா என்று தெரியவில்லை. டீ ஆர்பி யில் முதல் இடத்தில இருந்த எதிர்நீச்சல் நாடகம் தற்போது எந்த நிலைக்கு வரும் என்று தெரியவில்லை.