
watermelon benifits
தர்பூசணியின் மகிமை -வாங்குது எப்படி???
கோடைக் காலம் வந்தாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது தர்ப்பூசணி பழம் தான். கோடை கால தாகத்தை தீர்ப்பது தர்பூசணி தான். எல்லாருக்கும் ரொம்பவே பிடித்தவை தர்ப்பூசணி பழம். தர்பூசணி பழம் குறைந்த கலோரி அதிக ஊட்ட சட்டத்துக்கள் கொண்ட பழம். அதனால், உடல் எடையை குறைக்கக்கூடியது. அதிக விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. மேலும், இப்பழத்தில் நீர்ச்சத்து 90% உள்ளதால் உடல் சூட்டை எளிதில் தணிக்க வல்லது. இப்பழத்தில் அறிய வகை சிட்ருலின் என்ற புரதச்சத்து உள்ளதால் இயற்கை வயகரா என்ற வேறு பெயரும் உண்டு. சிட்ருலின் என்ற புரதச்சத்து உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடைய செய்ய உதவுகிறது. தர்ப்பூசணி இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் எலும்புகளுக்கு வலு கொடுக்கிறது. கோடை காலத்தில் நமக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு தரும். தர்ப்பூசணி மகிமைகள் அதிகம், விலை மிக குறைவு தான்.
இத்தகைய நன்மைகள் நிறைந்த தர்ப்பூசணி பழத்தை எப்படி வாங்குவது? என்று பலருக்கும் தெரியாது. வாங்க தெரிந்துக் கொள்ளலாம் . ஆண் தர்பூசணி மற்றும் பெண் தர்பூசணி என்று இரண்டு வகை உண்டு. உருவத்தில் நீளவாக்கில் கோடுகள் உள்ளவை ஆண் தர்பூசணி என்றும், உருவத்தில் உருண்டையாக கோடுகள் உருவத்தில் பெண் தர்ப்பூசணி என்றும் பிரித்துக்கொள்லலாம்.
சுவையில் பெண் தர்பூசணி தான் சிறந்தது. ஆண் தர்பூசணியில் தண்ணீர் சத்து இருக்கும் சுவை சற்று குறைவாகத்தான் இருக்கும். அதே போல, தர்பூசணியில் காம்பு காய்நது இருந்தால் அந்த பழம் பழுத்து விட்டது என்று அர்த்தம். அந்த பழம் தான் நல்லது. இயற்கையாகவே செடியில் பழுத்தது என்று அர்த்தம். காம்பு பச்சையாகவே இருந்தால் , அந்த தர்பூசணி பழம் செடியில் பழுப்பதற்கு முன்பே பறிக்கப்பட்டது என்று அர்த்தம். இந்த வகை பழத்தை தவிர்த்து விடுவது நல்லது. மேலும் பழத்தின் மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால் , அந்த பழம் அடிப்பட்டதாக நினைத்து பெரும்பாலும் வாங்க மாட்டோம். ஆனால் அந்த பழம் தான் நல்ல விளைந்தது அது தான் சிறந்த பழம்.