
vithaikkaran movie update
ஹீரோவாக களத்தில் இறங்கும் காமெடி நடிகர் சதீஸ் ….!!!
Comedian Sathish enters the field as a hero ….!!!

தமிழ் திரையுலகில் தற்போது காமெடி நடிகர் வரிசையாக ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளனர். சந்தானம், வடிவேல் ஹீரோவாக நிறைய படங்கள் நடித்த நிலையில், தற்போது சூரி விடுதலை படத்தில் நடித்திருந்தார் . சதீஸ் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். நாய் சேகர் படம் நல்ல வெற்றிப் பெற்றதை அடுத்து வித்தைக்காரன் படத்தில் நடிக்கவுள்ளார். வித்தைக்காரன் படத்தை வெங்கி இயக்குகிறார். இப்படத்தில் சதிஸ்க்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஆனந்த்ராஜ், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் காதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வி.பி.ஆர் இசையமைக்கிறார். இப்படத்தின் first லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. first லுக் போஸ்டரில் சதீஸ் ரொம்ப மாஸாக உள்ளார். இப்படத்தின் போஸ்டர் பார்க்கும் போது, வித்தைக்காரன் படம் சதுரங்க விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் திரைக்கதை எனலாம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.