விசுவாசம் படம் எப்படி இருக்கு ???

தல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா?? இல்லையா??? என்று பார்ப்போம்.

கதைக்கரு:-

 

படம் தேனீ மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊரில் ஆரம்பிக்கிறது. அந்த ஊரில் பெரிய ஆளாக அடிதடி, அடாவடி என ஊர் நலத்துக்காக எப்பவும் சண்டைக்கு நிற்கும் தூக்குத்துரை(அஜித் ). அவருடன் எப்பவும் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் தம்பி ராமையா மற்றும் ரோபோசங்கர். இவர்கள் அஜித்தை தூக்கிவைத்து அதாவது ரொம்ப உயர்வா பேசிக்கொண்டிருப்பார்கள் படம் முழுவதும். கொடுவிலார்பட்டிக்கு மருத்துவ முகாமிக்காக மும்பையில் இருந்து வருகிறார் டாக்டர் நிரஞ்சனா(நயன்தாரா). தூக்குதுரைக்கும்- நயன்தாராவுக்கும் இடையில் முதலில் சண்டையில் தொடங்கியது. பின்பு அது காதலாக மாறி, இருவருக்கும் கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அழகான அன்பான மனைவி, குழந்தை என தூக்குத்தூரை சந்தோஷமாக இருந்தார். பின்பு, ஒரு காரணத்தால் குழந்தை பிறந்த சில காலங்களில் நயன்தாரா தன் குழந்தைவுடன் தூக்குதுரையை விட்டு பிரிந்து மும்பை செல்கிறார். அதன் பின்பு அஜித் மனைவியை பிறந்த சோகத்தில் இருக்கிறார். அவர் இறுதியில் தன் மனைவி, மகளுடன் சேர்கிறா இல்லையா??? என்பது தான் மீதி கதை.

விமர்சனம்:-

அஜித் -சிவா கூட்டணியில் உண்மையில் ஒரு அழகான கமர்சியல் படத்தைக் கொடுத்துள்ளனர். அதற்கு முதலில் நன்றி. படத்தில் தூக்குதுரையாக வரும் அஜித் எமோஷனல், அடிதடி என இரண்டிலும் தன் நடிப்பை ரொம்ப அழகாக கொடுத்துள்ளார். படத்தில் அவருடைய நடிப்பு தான் படத்திற்க்கே பக்கபலம்.  அந்த அளவுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நயத்தாராவும் முதல் பாதியில் கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்துள்ளார். படத்தில் காமெடி நடிகர்கள் கூட்டமாக இருந்தாலும், படத்தில் காமெடி குறைவு தான். செண்டிமெண்ட், எமோஷனல் தான் அதிகம். முதல் பாதியில் வரும் தம்பி ராமையா மற்றும் ரோபோசங்கர் ரசிக்கும் படியான நகைச்சுவையைக் கொடுத்துள்ளனர். பின்பு , இரண்டாவது பாதியில் வரும் விவேக், காமெடி என்ற பெயரில் கொஞ்சம் நமக்கு எரிச்சலைத் தருகிறார்.

 

தன் குடும்பத்தை பார்க்க மும்பை சென்ற தூக்குத்துரைக்கு சிக்கல் வருகிறது. உண்மையில் அப்பா மகள் சென்டிமென்டில் தல நம் கண்களில் கண்ணீர் வர வைத்துள்ளார்,. எமோஷனலில் கண்கள் கலங்க வைத்துள்ளார் தூக்குத்துரை. அடிதடி என்று சுற்றிக்கொண்டிருக்கும் இவருக்குள் இப்படி ஒரு சென்டிமெண்டா??? என்று யோசிக்க வைக்குறது. நயன்தாராவின் நடிப்பு செம.மகளாக நடித்துள்ள “என்னை அறிந்தால்” குட்டி அனிகாவும் சிறப்பாகவே நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி சுமாராக நடித்துள்ளார். அவர் தான் வில்லன் என்று சொன்னால் கொஞ்சம் யோசிக்க தான் தோன்றும்.  படத்தில்  இமான்  இசையில் பாடல்கள் தூக்கல். பின்னணி இசையும் செம.

ஆனால், படத்தில் கதை என்று பார்த்தால் ஒன்றும் புதிதாக சொல்கின்ற அளவுக்கு இல்லை. இருந்தாலும்,படத்தை அழகா காட்டியுள்ளார் இயக்குனர் சிவா. டாக்டராக இருக்கும் நயன்தாரா படிக்காத, அடிதடி என்று சுற்றிக்கொண்டிருக்கும் தூக்குத்துரையை எப்படி காதலிக்கிறார் என்பது யோசிக்க வேண்டியது. அதை விட இப்படி காதலித்து கல்யாணம் செய்து ஒரு குழந்தையும் பிறந்த பின்பு அஜித்தை விட்டு நயன் பிரிவதும் லாஜிக் இல்லாதா ஒன்றாக தோன்றுகிறது. சில இடங்களில் பாடல்கள் சம்பந்தமே இல்லாமல் வருவது போல தோன்றுகிறது. காமெடி சுமார் தான். டாக்டராக இருக்கும் நயன்தாரா மும்பை சென்று தொழில்அதிபராக இருக்கிறார், அதுவும் லாஜிக் இல்லை. படத்தில் ஒரு சில லாஜிக் இல்லாதா விஷயங்கள் இருந்தாலும் படம் ஆக்ஷன் மற்றும் எமோஷனல் கலந்த ஒரு நல்ல குடும்ப படமாக அமைத்துள்ளனர் சிவா-அஜித் கூட்டணி.

cinibook rating:- 2.7/5

You may also like...