வைரலாகும் விசுவாசம் சண்டைக்காட்சி – அதிர்ச்சியில் படக்குழுவினர்…!!!!!

wait loading cinibook video

தல அஜித் நடித்து வரும் விசுவாசம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தல அஜித் சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் விசுவாசம்.  இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்மரமாக நடந்து வரும் வேளையில், இடையிடையே படப்பிடிப்பின் போது அஜித் எடுத்த புகைப்படங்கள் ஏற்கனேவே,  இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் நடந்து வருகிறது. முக்கிய சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அஜித் சண்டை போடும்  போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கில் பிரபலமான ரவி அவானா விசுவாசம் படத்தில் ஒரு வில்லனாகா நடித்துள்ளார் என செய்தி வெளியானது. அவருடன் அஜித் சண்டை போடும் புகைப்படம் தான் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


இந்த படத்தில் அஜித் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, இம்மான் அண்ணாச்சி, விவேக் மற்றும் கோவைசரளா என அனைத்து காமெடி நடிகர்களும் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கினர். விசுவாசம் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணப் போவதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, படப்பிடிப்பு சார்ந்த புகைப்படம் வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

You may also like...