விஷாலின் இரும்புத்திரை படத்திற்கு சர்ச்சை, படத்தை தடைசெய்ய வேண்டும் என பொதுநல வழக்கு

விஷால் சமந்தா மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில். ஆதார் அட்டை மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தவறான கருத்து உள்ளது என்றும் எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாமக்கல்லைச் சேர்ந்த என்.நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை உயர்நீதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்து அமைப்புகளும் இரும்புத்திரை படத்திற்கு எதிர்ப்புகள் தெரிவித்ததுவருகிறது. அதன் அடுத்தகட்டமாக விஷால் வீட்டை முற்றுகையிட போவதாக இந்து அமைப்புகள் அறிவித்திருந்தது. இதன் காரணமாக விஷால் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

You may also like...