Vijay will be act superstar rajinikanth film after bairavaa finished

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரீமேக் படத்தில் நடிக்க விருப்பம்-விஜய் :-
நடிகர் விஜய் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் படம் “பைரவா” இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் இப்படத்தை பரதன் இயக்குகிகிறார்,இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்துக்கொண்டியிருக்கின்றன. அனேகமா இப்படம் பொங்கல் விருந்தாக வெளிவரும் என செய்திகள் வருகின்றன.இதற்கிடையில் விஜய் ரசிகர்கள் ஏற்கனவே விஜய் சூப்பர்ஸ்டார் நடித்த படத்தில்( ரீமேக்)மீண்டும் விஜய் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் அளித்த ஒரு பேட்டியில் விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த “அண்ணாமலை” படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் என்று தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில் ரஜினி அவர்கள் நடித்து கொண்டிருந்த 2 .0 படத்தின் இறுதி பணிகள் முடிந்து, இப்படமும், விஜயின் பைரவா படமும் எம்.ஜி.ஆர். அரங்கில் திரையிடப்பட்டது. அப்போது அங்கு நடிகர் விஜய் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுடன் சுமார் 20 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.ரஜினி அவர்கள் அதற்கு பச்சை கொடி காட்டி உள்ளார் என்று தெரிகிறது.
இளையதளபதி விஜய் பைரவா படத்திற்கு பிறகு அவர் சூப்பர்ஸ்டார் நடித்த அண்ணாமலை படத்தில் நடிப்பார் என தெரிகிறது.பைரவா படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ உடன் ஒப்பந்தம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *