விஜய் டிவி சூப்பர் சிங்கர்6 – செந்தில் கணேஷ் முதல் பரிசு தட்டிச் சென்றார்

70லட்சம் மதிப்புள்ள பரிசுகளை தட்டி சென்ற செந்தில் கணேஷ் ராஜலட்சுமி. விஜய் டிவி சூப்பர் சிங்கர்- செந்தில் கணேஷ் முதல் பரிசு தட்டிச் சென்றார்.

கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் அற்புதாக நடந்து கொண்டு வந்த வேளையில். இருதிச்சுற்றில் தேர்வுசெய்யப்பட்ட அணைவரும் மிகவும் அருமையாக பாடிவந்தனர். ரக்ஷித்தா, ஸ்ரீகாந்த், சக்தி என அனைவரும் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தினார் இருந்தாலும் நாட்டுப்புற கலைஞர் மற்றும் மக்கள் இசை பாடகர் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார் மற்றும் தனது பாடல்களிலும் மிகவும் பிரமாதமாக பாடி அசத்தினார்.. இறுதியில் அவரே முதல் பரிசான அருண் எக்ஸ்சல்லோ வழங்கும் 50லட்சம் மதிப்புள்ள வீட்டை தட்டி சென்றார். அதுமட்டுமல்லாது நாட்டுபுற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக செந்தில் கணேஷிற்கு அருண் எக்ஸ்சல்லோ 15லட்சம் ரூபாய் மதிப்புள்ள மற்றொரு வீடுவேறு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து செந்தில் கணேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் ஏஆர் ரகுமான் இசையில் அவரது படத்தில் பாடல் வேறு படையுள்ளார் என்பது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி.

பிறகு ராஜலஷ்மிக்கு ராமராஜ் காட்டன் வழங்கும் 5லட்சம் ருபாய் ரொக்கத்தை பரிசாக அளித்தது. அதனை அவர் நெசவு தொழில் செய்பவர்களுக்காக வழங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like...