சர்கார் கதை கசிந்தது – இதுதானா கதை????அதிர்ச்சியில் ரசிகர்கள் ……!!!!!

ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் சர்கார். இந்த படத்தின் first look போஸ்டர் தற்போது (சில வாரங்களுக்கு முன்பு ) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில் இப்படத்தின் கதை இது தான் என்று லேசாக கசிந்து வருகிறது. அது உண்மையானவையா என்று தெரியவில்லை…..

 

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “சர்க்கார்”  படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஓரளவு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் ரொம்ப வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை வெளியாகி தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, இந்த படத்தில் விஜய் ஒரு தொழிலதிபராக வருகிறார். அவர் தொழிலதிபராக அமெரிக்காவில் இருந்து இந்தியா வருகிறார். இந்தியா வந்தவுடன் ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லாததால், தன்னுடைய பெயரை சேர்க்க முயற்சிக்கிறார். ஆனாலும் அனைத்தும் இடத்திலயும் அலட்சியம் படுத்தி விஜய்யை திருப்பி அனுப்புகிறார்கள். பின்பு ஒரு கட்டத்தில் அவரே  களத்தில் இறங்கி அதற்கான வேலையை செய்கிறார் என்பது தான் கதையாம். அதாவது, இப்படத்தின் மையக்கரு ஓட்டு போடும் உரிமையை நாம் விட்டு விட கூடாது என்பதாக இருக்கும் போல……….. இருந்தாலும், இது தான் கதை என்றவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளனர்.  இது எந்த அளவு உண்மை?  என்று தெரியவில்லை. பார்பபோம்……கதை எதுவென்று???? தீபாவளி வரைக்கும் பொறுத்து தான் ஆகணும்……………….

You may also like...