விஜய்-62 படத்தின் பெயர் “சர்கார் “- விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் !!!!!

wait loading cinibook video

 விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் பெயர் வெளியிடப்பட்டது . விஜய்-62 என்று அழைக்கப்பட்ட படத்தின் பெயர் சர்கார்...

விஜயின் மெர்சல் படத்திற்கு பிறகு அவர் அடுத்து நடித்துகொண்டிருக்கும் படத்தை ஏ.ஆர், முருகதாஸ் இயக்கிறவருகிறார். ஏறக்கேனே விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து துப்பாக்கி,கத்தி என இரண்டு வெற்றி படங்களை கொடுத்து உள்ளனர்.  தற்போது ,மூன்றாவது முறையாக இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  விஜய்-62இல் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலக்ஷ்மி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படித்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், இதற்கு முன்பு இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைப்பார்  என்ற செய்தி வெளிவந்து ரசிகர்கள் கொண்டாடினர்.  இதையடுத்து, தற்போது படக்குழு இந்த படத்தின் முதல் பார்வை புகைப்படத்தையும் மற்றும் படத்தின் பெயரையும்  ஜூன் 21 மாலை 6மணியளவில் வெளியிடப்போவதாக அறிவித்து இருந்தது.

 

அதன் படி படத்தின் பெயர் “சர்கார்”  என தற்போது வெளிவந்தது . படத்தின் முதல் பார்வை புகைப்படமும் தற்போது வெளிவந்து உள்ளது.  அதில் விஜய் ரொம்ப ஸ்டைலா புகைப்பிடித்த படி தோன்றுகிறார்.  மேலும் படத்தின் தலைப்பு “சர்கார்”  என அரசியல் சம்பத்தப்பட்ட பெயராக உள்ளதால், இந்த படம் ஒரு அரசியல் படம் என்பதில் சந்தேகமே இல்லை.  இதுக்கு முன்னாள் தளபதி நடித்த மெர்சல் படத்தில் அரசியல் வசனங்கள் இடம் பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பின்பு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது……
தளபதி பிறந்த நாளை ஜூன்-22 முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் பெயரை வெளியிட்டது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து அப்பாவி மக்கள் இறந்தால், விஜய் இந்த வருடம் என்துயா பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என தெரிவித்து உள்ளாராம். அதனால், விஜய் ரசிகர்களுக்கு படத்தின் பெயர் வெளியிட்டது திருப்த்தி அளித்து உள்ளது. இதையே அவர்கள் விஜயின் பிறந்த நாள் கொண்டமாக எண்ணி கொண்டாடி வருகின்றனர் .

You may also like...