விஜய் எப்படி தூத்துக்குடி வந்து யார் கண்களிலும் படாமல் சென்றார் ???

wait loading cinibook video

தமிழ் சினிமாவில் மற்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் விஜய் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பகலில் சென்றால் ரசிகர்கள் மீடியாக்கள் அதிகம் கூடிவிடும் என்பதற்காக 6 ஜூன் 2018(நேற்று) அன்று இரவு 1:30மணியளவில் இறந்தவர்களது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி டோல் கேட் வரை காரில் பயணம் செய்த விஜய் அதன் பிறகு தனது ரசிகர் மன்றத்தாரின் உதவியுடன் பைக்கில் முகத்தில் கர்ச்சீப் கட்டியவாறு பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்குநேரடியாக சென்றார். நள்ளிரவில் யார்? வருகிறார் என்று தெரியாமல் கதவை திறந்து பார்த்தவர்கள், விஜய் என்று தெரிந்ததும் திகைத்து போயினர். இதையடுத்து அவர்கள் தங்கள் துக்கம் தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டனர். பிறகு, விஜயை உள்ளே அழைத்து நாற்காலியில் அமர சொன்னார்களாம்,
ஆனால்,தளபதி அவர்களுடன் தரையிலேயே அமர்ந்து ஆறுதல் கூறினார். மேற்கொண்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு தல ஒரு லட்சம் ருபாய் காசோலை வழங்கினார். மிகுந்த சோகத்துடன் அதனை தூத்துக்குடி போராட்டத்தில் இறந்தவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

விஜய் எப்படி தூத்துக்குடி வந்து யார் கண்களிலும் படாமல் சென்றார் ???

துப்பாக்கி சூட்டில் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட 17வயது இளம் பெண் ஸ்னோலின் வீட்ற்கும் சென்று விஜய் தனது ஆறுதலை தெரிவித்தார். மேலும் தான் வருகை தந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் போட்டோ விடியோக்கள் எடுக்க வேண்டாம் என்று கூறினார் அனால் மக்கள் விஜயின் மீது கொண்ட பாசத்தால் வீடியோ போட்டோக்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இதே வேளையில்ரஜினிகாந்திற்கு மட்டும் தூத்துக்குடி மக்கள் தங்கள் எதிப்பை தெரிவித்தனர், ஏனென்றால் ரஜினி போராட்டம் சமூக விரோதிகளால் அரங்கேற்றப்பட்டது என்று மக்களின் தார்மீக போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவர் மீது கடும் கோபத்துடன் உள்ளனர்.

 

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *