
viduthalaiu movie-update-iphone
ஐபோனில் படப்பிடிப்ப்பு!!!!! விடுதலை படக்குழுவினர் அறிவிப்பு:-
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி நடித்து வரும் படம் தான் விடுதலை. தற்போது இந்த படத்தில் இருந்து வெளியான இளையராஜா பாடல் இ ணையத்தில் வேகமாக பரவி வந்தது. இப்படம் இரு பாகங்களாக உருவாகி வருகின்ற நிலையில் இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற மார்ச் 31- ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் முழுவதுமே அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. அதுவும் எப்படி தெரியுமா? ஐபோன் 12 மாடல் மூலமாக படமாக்கட்டுள்ளதாம். அடர்ந்த காடு என்பதால் வெற்றிமாறன் இப்படத்தின் படப்பிடிப்பை ஐபோன் மூலம் படமாக்கியுள்ளார். அடர்த்த காடு என்பதால் படப்பிடிப்பு தேவையான உபகரணங்களை அதாவது கேமரா போன்றவற்றை எடுத்துச் செல்வது சிரம்மாக இருந்ததால் இயக்குனர் வெற்றிமாறன் ஐபோன் 12 மாடலை பயன்படுத்தியுள்ளார்.
ஐபோன் மூலம் ஏற்கனவே, தமிழில் மூன்று படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முதலில் தமிழில் 2019 இல் வெளியான, “அடடே” படமும் ஐபோன் இல் தான் முழுவதும் எடுக்கப்பட்டது. இயக்குனர் கமல் சரோமுனி அடடே படத்தை தயாரிக்கும் செலவை குறைப்பதற்காக இப்படத்தை ஐபோன் எடுத்ததாக கூறியிருந்தார். அதே போல அகண்டன் , லாக்டவுன் போன்ற படங்களும் ஐபோன்- இல் எடுக்கப்பட்டவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.