
viduthalai-audio launch
விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திடிரென கோபமான இசையானி இளையராஜா!!!! நடந்தது என்ன???
சூரி மற்றும் விஜய் சேதுபதுபதி நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் விடுதலை. இப்படத்தில் பிரகாஷ்ராஜ் , கெளதம் வாசுதேவ் மேனன் , ஆடுகளம் நரேன் மற்றும் பாவணி ஸ்ரீ சேத்தன் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதையாசிரியார் ஜெயமோகனின் துணைவன் என்னும் சிறுகதை தான் படமாக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த வந்ததாம். இப்படத்தின் முதல் பாகம் முடிந்த நிலையில், சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது . இப்படத்திற்கு இசையானி இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இளையராஜா அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ரசிகர்களின் கூச்சல் காரணமாக, சற்று கோபம் அடைந்தார். அவர் பேசுகையில் இப்படம் தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத புது விதமான கதைக்களத்துடன் உள்ளது எனத்தெரிவித்தார். மேலும் , அவர் பேசுகையில் இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் எப்பொழுதும் புது விதமாக சிந்திப்பவர் எனவும், அவர் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றவை. அதே போல, இப்படமும் தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெரும் எனக்குறிப்பிட்டுளார்.
இயக்குனர் வெற்றிமாறன் பேசும் போது , இப்படத்தின் அடித்தளமே இளைராஜா சார் தான். இப்படத்திற்கு ஏற்றாற்போல அவர் இசையமைத்துள்ளார். என் உணர்வுகளை அவரிடம் தெரிவித்த உடன் இளையராஜா சார், அதற்கேற்றவாரே இசையமைத்து தந்தார் என்று வெற்றிமாறன் தெரிவித்தார். இப்படத்தின் வழி காட்டு காட்டு மல்லி பாடலை அவரே எழுதி இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து நான் படம் பண்ணது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது எனத் தெரிவித்தார்
இப்படத்தில் நடித்த சூரி மற்றும் விஜய்சேதுபதி இருவருமே ரொம்ப யதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என இளையராஜா பேசுகையில் தெரிவித்தார். இப்படத்தின் டீஸர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காமெடியனாக நடித்து வந்த சூரி, இப்படத்தில் மெயின் ரோலில் நடித்துள்ளார். டீஸர் பார்க்கும் போதே ரொம்ப மிரட்டலா வித்தியாசமாக உள்ளது. இப்படத்திற்கு பிறகு சூரியின் திரையுலக பயணத்தில் மாற்றம் வரலாம் என தெரிய வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டனர்.