
viduthalai box office collection
வசூல் வேட்டையில் விடுதலை படம்….!!!
viduthalai movie in collection hunt…!!!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படம் தான் விடுதலை பாகம் 1 . இப்படத்தில் சூரி முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். இளைராஜா இசையில் பாடல்கள் அருமையாக இருந்தது. இப்படத்தில் சூரியின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாகம் 1 -இல் விஜய்சேதுபதி அதிகம் வரவில்லை. இரண்டாவது பாகத்தில் முழுக்க முழுக்க விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் இருக்கும் . இரண்டாவது பாகத்திற்க்கான படவேலைகள் ஆரம்பித்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலை பாகம் 1 வெளியாகி 10 நாட்கள் ஆனா நிலையில் வசூலில் உலக அளவில் 40 கோடியை தாண்டியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 33 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.விடுதலை படமும், சிம்புவின் பத்துதலை படமும் ஒரே நேரத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றது இரண்டு படங்களும். இதில் விடுதலை படம் முன்னணியில் உள்ளது,வசூலில்.