
very useful health tips
மிகவும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள்:-
very useful health tips:-
- வயிற்று வலி, சீதபேதிக்கு, கருவேப்பிலையை பச்சையாக அரைத்து மோரில் கலந்து சாப்பிட குணமாகும்.
- கருவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாந்தி,பித்தத்தை நீக்குவதுடன் கல்லீரல், மண்ணீரல், ஜீரணப்பைகள் வலிமை பெறுகின்றன.
- இரவில் கைக்குழந்தைகள் தூங்கவில்லை என்றால், கசகாவை அரைத்து ஆண் குழந்தை எனில் ஆண்குறியிலும், பெண் குழந்தை என்றால் பெண் குறியிலும் தடவினால் சுமார் 15 நிமிடங்களில் குழந்தைகள் தூங்கிவிடும்.
- குழந்தைகளுக்கு சிறுநீர் போகாமல் இருந்தால், தேனை எடுத்து ஆண் குழந்தையெனில் ஆண்குறியிலும், பெண் குழந்தையெனில் பெண்குறியிலும் தடவ சிறுநீர் வெளியேறும்.
- குழந்தைகளுக்கு மலசிக்கல் இருந்தால் புளியம்பழத்தில் உள்ள நரம்பினை உருவி எடுத்து அதனை ஆசனவாயில் இரண்டு முறை உள்ளே வைத்து உருவி எடுக்க, சிறுது நேரத்தில் மலசிக்கல் தீரும்.
health tips in tamil
- இரவில் கண்விழித்து வேலை பார்ப்பவர்கள், வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி உண்டாகும்.
- பொன்னாங்கண்ணிக்கீரையை உப்பு சேர்க்காமல் வேகவைத்து,பசுவெண்ணெய்யுடன் தினசரி சாப்பிட்டு வந்தால் கண் சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும் .
- மணத்தக்காளிக் கீரை சாறை எடுத்து வாய்கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
- வெயில்காலங்களில் வரும் வேர்க்குரு குணமாக, சாதம் வடித்த கஞ்சியை எடுத்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி சிறுது நேரம் கழித்து குளித்தால் வேர்க்குரு விரைவில் மறையும்.
- பற்கள் உறுதி பெற மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கி வந்தால் பல் உறுதி பெரும்.