
very useful home tips
மிக மிக பயனுள்ள வீட்டுக்குறிப்புக்கள்:-
- வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றி வைப்பதால் நான்கு நாட்கள் ஆனாலும் வாழைப்பழம் கருக்காமல் அப்படியே இருக்கும்.
- கருவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் அப்படியே இருக்கும்.
- தோசை மாவில் சிறுது சக்கரையை கலந்து தோசை சுட்டால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் மிக ருசியாக இருக்கும்.
எந்த கிழங்கு வேகவைக்க வேண்டும் என்றாலும், வேகவைப்பதற்கு முன்பு உப்பு கலந்த தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைத்த பின்பு கிழங்கை வேகவைத்தால் கிழங்கு சீக்கிரமாக வேகும். - கோதுமை மாவில் வந்து பிடிக்காமல் இருப்பதற்காக சிறுதளவு உப்பை கோதுமை மாவில் கலந்து வைத்தால் வந்து பிடிக்காது.
- காப்பர் bottom உள்ள பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினீகரையும் கலந்து பாத்திரத்தின் மேல் போட்டு நன்கு அழுத்தி தேய்த்தால் பாத்திரம் மங்காமல் நீண்ட நாள் வரும்.
- மிக்ஸி ஜாரில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், பிளேடு கழற்றுவதற்கு மிக்ஸி ஜாரை பிளேடு அளவிற்கு வெந்நீர் ஊற்றி சிறுது நேரம் ஊறவைக்கவும். பின்பு நீரை கீழே ஊற்றி விட்டு பிளேடை சுழற்றினால் எளிதில் கழற்றலாம்.
- உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது சிறிதளவு புளிப்பு இல்லாத தயிர் சேர்த்தால் சுவை கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.
- இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து அரைத்து பொடியாக சேர்க்கவும். அப்படி சேர்த்தால், இட்லி சாம்பார் கூடுதல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
- உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
ரசம் வைக்கும் போது, அதில் தேங்காய் தண்ணீரை சேர்த்து வைத்தால் சுவையாக இருக்கும். - இட்லி வேகவைக்கும் போது, இட்லி மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் கலந்து சுட்டால் இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் இட்லி கெடாமல் இருக்கும்.
Nice one