சிம்புவின் நடிப்பில் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தின் டீஸர் வெளியீடு….!!!! அதிக லைக்ஸ் பெற்ற வீடியோ

சிம்பு நடிப்பில் வந்த ராஜாவாகத்தான் வருவேன் படத்தின் டீஸர் இன்று வெளியாகி சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

 

சிம்பு தமிழ் சினிமாவில் பல மாதங்களாக நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் கொண்டாடினர். தற்போது, மீண்டும் சிம்பு ரசிர்கர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் சுந்தர் சி இயக்கத்தில்
வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தின் டீஸர் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சிம்பு ஒரு குறும்பு செய்யும் பிளேபாய் போல நடித்துள்ளார்.

 

அவருடன் சேர்ந்து ரோபோ சங்கர், யோகிபாபு, பிரபு, ரம்யாகிருஷ்ணன்,கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் மற்றும் மகத் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. விரைவில் சிம்புவின் குறும்புத்தனத்தை பார்க்க அனைவரும் காத்திருப்போம்……

You may also like...