Vada Chennai movie review – Dhanush, Ameer, Aishwarya Rajesh, Andrea

wait loading cinibook video

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் பல வருடங்கள் உழைப்பில் உருவான படம் தான் வடசென்னை. இப்படம் இன்று வெளியாகி முதல் நாளிலே வசூல் அள்ளியது எனலாம் . படம் எப்படி இருக்கு பார்க்கலாம் வாங்க…….

கதைக்களம் :-
வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். வடசென்னை பகுதியை கைக்குள் வைத்திருக்கும் ராஜன் (அமீரகன்). அவரின் குழுவில் குணா (சமுத்திரக்கனி ),செந்தில் (கிஷோர் ), வேலு (பவன் ) மற்றும் பாலாஜி (டேனியல் பாலாஜி ) ஆகியோர் உள்ளனர் . இந்த குழு தான் வடசென்னை ஆண்டு வந்தது எனலாம். இடையில் பண ஆசைக்காக கட்சி சார்பாக (ராதா ரவி ) முத்து அவர்கள் ராஜனுக்கு ஒரு கட்டளை தருகிறோம் . அதாவது, கடலோரா பகுதி மக்களை அப்புறப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தனியாக குவார்ட்டர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருகிறோம் என்று சொல்லிகிறார். ஆனால், ராஜன் கடோலார மக்களுக்கு வாழ்வாதரமே இல்லாமல் போய்விடும் என்பதால் அவர் அதை செய்ய மறுக்கிறார். இப்பிரச்னைக்கு பிறகு திடிரென்று ராஜன் அவர்களை துரோகம் செய்து கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு அவர் குழுவில் இருந்த செந்தில் மற்றும் குணா இருவரும் தனி தனி குழுவாக பிரிந்தனர். பின்பு செந்தில் ஒரு கொலை குற்றத்திற்க்காக சிறைக்கு செல்கிறார். இவர்கள் கூட்டணியில் அன்பு (தனுஷ் ) வந்து சேர்கிறார். படத்தில் தனுஷ் ஒரு கேரம் பிலேயராக ஆகா வேண்டும் இருக்கும் தனுஷ் எப்படி இந்த கூட்டணியில் இணைகிறார்.இவர் இணைந்த பின்பு என்ன நடக்கறது? இவர் சேர்வதற்கு முன்பு என்ன நடந்தது என கதை செல்கிறது. மேலும், இவர்கள் ஏன் இப்படி தனி தனி குழுவாக பிரிந்தார்கள். ராஜன் எப்படி கொலை செய்யபட்டார் என்பதை கண்டுபிடித்தாரா??? என்பதை சொல்கிறது மீதி கதை.

திரைவிமர்சனம்:-

முதலில் இயக்குனர் வெற்றி மாறன் அவர்கள் மிக பெரிய பாராட்டை தெரிவித்துக்கொள்ளலாம். ஏன் என்றால்? படம் நம்மை அப்படியே உணர வைக்கிறது. படம் பார்த்தது போல இல்லை நம்மளை கதைக்குள்ளேயேச் சென்று வாழ வைத்துள்ளது எனலாம். அந்த அளவுக்கு ஒரு எதார்த்தம் படத்தில் நம்மால் உணர முடியும். மேலும் படத்தில் நடித்த அணைத்து நடிகர் நடிகைகள் அனைவருமே ரொம்ப உணர்ச்சிப்ப்பூர்வமா நடித்து கலக்கியுள்ளனர். முக்கியமாக ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த அமீரகான் நம் நெஞ்சில் நிறைந்துள்ளார் எனலாம். ஏன் என்றால்? படத்தில் அவர் இறந்த பின்பு கதை முழுக்க அவரின் நடிப்பால் நம்மை நினைவுபடுத்த வைக்கிறது. தனுஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் அந்த அளவுக்கு படத்தில் சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் அவர்கள் வரும் ஒரு சில காட்சிகள் அழகா நடித்து உள்ளார் ஐஸ்வர்யா .

மூன்று விதமான காலகட்டங்களில் படம் நகர்கிறது . அதாவது 80,90,மற்றும் 2000 என இந்த மூன்று காலகட்டத்தையும் ரொம்பவே நேர்த்தியான முறையில் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். உண்மையில் வேறு யாராலும் இவ்வளவு நேர்த்தியா காம்பிச்சிருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.
படத்தில் அனைவரின் நடிப்பு ஒரு பக்கம் மறு பக்கம் இசை என படத்திற்கு பலம் கொடுத்துள்ளனர்.
இசையில் சந்தோஷ் நாராயணன் சும்மா மிரட்டி உள்ளார். ஒளிப்பதிவு செம. படத்தில் சிறையில் மற்றும் குடிசை பகுதி செட் தான் என்றால் படம் பார்த்தவர்களுக்கு அதிரிச்சியாக இருக்கும். அப்படியா உண்மையை போலவே காட்டியுள்ளார் காலை இயக்குனர் ஜாக்கி. படத்தில் யதார்த்தமான வாழ்க்கையை காட்டி அசத்தியுள்ளார் இயக்குனர் வெற்றி.

மொத்தத்தில் படம் அனைவரும் திரைஅரங்கம் சென்று பார்க்க வேண்டிய அற்புதமான மாஸ் படம்…….!!!!!!!!!!!!

 

சினிபூக்கின் மதிப்பு :- 2.8 

Movie cast and crew

Directed by Vetrimaran

Produced by Dhanush

Written by Vetrimaran
Starring Dhanush,Ameer,Aishwarya Rajesh,Andrea Jeremiah
Music by Santhosh Narayanan
Cinematography Velraj
Edited by Sreekar Prasad
Production company Wunderbar Films
Distributed by Lyca Productions
Release date 17 October 2018
Country India
Language Tamil
Budget ₹165 crore

You may also like...