சிவகார்த்திகேயன் எதற்காக தன் மகளை கனா படத்தில் பாடவைத்தார்!!!

வாயாடி பெத்த புள்ள கனா படத்திலிருந்து மிகவும் ட்ரெண்டிங்காக ஓடிக்கொண்டிருக்கக்கூடிய பாடல், இதனை பாடிய சிறுகுழந்தை வாய்ஸ் நம்ம சிவகார்த்திகேயனின் பெண் குழந்தை ஆராதனா தான். சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் மற்றும் பாடக்குழு ஆகிய அனைவரும் ஒன்றாக படித்தவர்கள் அவர்கள் அனைவரும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று அன்றிருந்து பேசிக்கொண்டு வருகின்றனர் இந்த கனவு கான படத்தில் நிறைவுபெறுகிறது.

படத்தின் வேலைகள் சென்றுகொண்டிருந்த வேலையில் அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயனிடம் சென்று ஆராதனவை பாடவைக்கலாம் என்றார், அதற்கு முதலில் சிவகார்த்திகேயன் சம்மதிக்கவில்லை, பிறகு அருண் அவள் அனிரூத் பாடல்கள் எல்லாம் நான்றாக பாடி நான் கேட்டிருக்கிறேன் அதனால் அவள் பாடினால் படத்திற்க்கு இன்னும் வழு சேர்க்கும் என்று கூறி சிவகார்த்திகேயனின் சம்மதம் பெற்றார். அதேசமயத்தில் படத்தில் அமைத்துள்ள “வாயாடி பெத்த புள்ள” பாடலும் சரியாக அமைத்தது. பிறகு ரெகார்டிங் செய்தனர்.

பாடல் வெளிவந்து ஒரு சில நாட்களிலே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது அனைவரது பாராட்டுக்களை பெற்றார் ஆராதனை. youtube இணையதளத்தில் ஓரிரு நாட்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் வந்து விட்டார்கள். இதனால் சிவகார்த்திகேயனின் குடும்பத்தார் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியிலுள்ளனர்.

இதன் வீடியோ பாடல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது கண்டு மகிழுங்கள்!!!

You may also like...