Uriyadi 2 review – Vijay Kumar, Suriya

wait loading cinibook video

உறியடி 2, இதன் முதல் பாகம் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றபடம். இதன் இரண்டாம் பாகத்தை நடிகர் சூர்யா இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் விஜய் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் அணைத்து காட்சிகளும் தென்காசி மற்றும் குற்றாலம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. இதன் இரெண்டாம் பாகம் தற்போது வெளிவந்துள்ளது அதன் கதைச்சுருக்கம் மற்றும் காட்சிகள் எப்படி அமைந்துள்ளது என்று பார்க்கலாம்.

கதைச்சுருக்கம்

உறியடி முதல் பாகத்தின் தொடர்ச்சி என்று தான் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதன் இரண்டாம்பாகம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் ஒரு நிறுவனம் மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒரு தொழிலை செய்ய நினைக்கின்றது. ஆனால் அதற்கு அந்த நாடு முட்டுக்கட்டை போடுகிறது. அதனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் இறுதியில் இந்தியாவில் அந்த தொழிலை நிறுவி பணம் சம்பாதித்து விடலாம் என்று இங்கே உள்ள அரசியல் வாதிகளின் உதவியுடன் தொடங்குகின்றனர். அவர்களும் பணத்திற்க்காகவும், பதவிஉயர்விற்காகவும் இதனை செய்கின்றனர்.

வேறொன்றும் இல்லை ஒரு கெமிக்கல் தொழிற்சாலை நிறுவுகின்றனர் அதிலிருந்து கிளம்பும் விஷவாயுவால் அப்பாவி மக்கள் இறக்கின்றனர் அதற்கு என்னனென்ன தீர்வு காணவேண்டும். எப்படியெல்லாம் இந்த அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த படத்தில் இயக்குனர் விஜய் குமார் கையாண்டுள்ளார்.

Trailer

 

திரைவிமர்சனம்

முதலில் இவ்வளவு திடமான கதைக்களம் அமைத்து அதனை வெற்றிகரமாக வெளிக்கொண்டு வந்துள்ள இயக்குனர் விஜய்குமார்க்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் அவர் கூறுவரும் கருத்துக்கள் அனைத்தும், மக்களிடம் சென்றடையும் அளவிற்கு திரைக்கதையில் இல்லை என்றே கூறலாம். அதேபோல் ஒருசில இடங்களில் சிறிது தாமதமாக படம் சென்றாலும் அடுத்தடுத்து வரும் காட்சியமைப்புகளில் அதனை சரிசெய்துள்ளனர்.

அதேபோல் குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் காட்சி மிகவும் நன்றாக அமைத்துள்ளார் இயக்குனர். அதேபோல் படத்தின் இறுதிக்கட்டத்தில் உறியடி முதல் பாகத்தில் வரும் பின்னணி இசையை அமைத்து படம் பார்ப்பவர்களின் நெஞ்சத்தை கொள்ளைகொள்கிறார் இதன் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த.

Uriyadi 2 review - Vijay Kumar, Suriya

uriyadi 2 review

படம் முழுக்க அரசியல் தானா ? என்றால் இல்லை… படத்தின் முதல் 30நிமிடத்திற்கு நகைச்சுவை கலந்த காதல் காட்சிகளுடன் தொடங்குகின்றது. இருந்தாலும் அந்த காட்சி படத்துடன் சிறிது சேராதது போல் தோன்றுகிறது.

மதிப்பெண்

மொத்தத்தில் இந்த படத்திற்க்கு சினிபுக் 5க்கு 2.5கொடுக்கிறது.

Movie cast and crew

Directed by Vijay Kumar
Produced by Suriya
Written by Vijay Kumar
Starring Vijay Kumar
Sudhakar
Vismaya
Music by Govind Vasantha
Cinematography Praveen Kumar N.
Edited by Linu M.
Production
company
2D Entertainment
Distributed by Sakthi Film Factory
Release date
April 5th 2019
Country India
Language Tamil

Leave a comment

You may also like...