தூத்துக்குடி துப்பாக்கி சூடு பின்னணி என்ன ??, இறந்தவர்களின் முழு விபரங்கள்….

wait loading cinibook video

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு  நிறைய பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், தூத்துக்குடி மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானாகின்றனர் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அந்த மாவட்ட மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த போராட்டம் வழுப்பெற்று தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அதற்க்கு ஆதரவு கரங்கள் நீட்டினார், அதுமட்டுமில்லாது அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா துறையை சேர்ந்தவர்களும் தங்கள் ஆதரவையும் உதவிகளையும் புரிந்து வருகின்றார்.

இதையடுத்து இந்த போராட்டம் தொடங்கி இன்றோடு 100வது நாள் அதற்காக மக்கள் அனைவரும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் போராட்டத்தை கைவிடகோரி பொதுமக்களை கேட்டுக்கொண்டனர் ஆனால் ஆலையை மூடவேண்டும் என்ற கரகோசங்களுடன் வந்த தூத்துக்குடி மக்களை போலீசார் தாக்க தொடங்கினர் இதையடுத்து அது ஒரு பெரும் கலவரமாக மாற்றி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசாரின் இந்த கடும் வன்முறை சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 9பேர் போராட்டக்களத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம் கலவரமாக மாறினால் போலீசார் முதலில் என செய்யவேண்டும் தண்ணீரை பீய்ச்சியடிக்கவேண்டும், இல்லையென்றால் கண்ணீர் புகைகுண்டுகளால் அடிக்கவிடும், அதுவும் இல்லையென்றால் ரப்பர் குண்டுகளால் சுடவேண்டும், அதுவும் இலையையென்றால் துப்பாக்கியால் போராட்டக்காரர்களின் கால்களில் சுடவேண்டும் இவை எதுவுமே இல்லாமல் அப்பாவி பொதுமக்களின் உயிரை பறித்துள்ளனர். இவ்வளவு அதிகாரம் இவர்களுக்கு யார்கொடுத்தது இதன் பின்னணி என்ன. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் பெரிதாகிவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வேலையா!!! இது மக்களின் அரசாங்கமா இல்லை காசு சம்பாதிபத்தர்க்காகவே திரியும் கார்ப்ரேட்களுக்ககான அரசாங்கமா என்பது தெரியவில்லை. இந்த நிலை எப்போது மாறும்…

இறந்தவர்களின் விபரம்

1)ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்) 2) கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி) 3)கந்தையா (சிலோன் காலனி – தூத்துக்குடி) 4) வெனிஸ்டா (17 வயது மாணவி) தூத்துக்குடி 5) தமிழரசன் – புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை – தூத்துக்குடி) 6) சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி) 7) அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி) 8) மணிராஜ் தூத்துக்குடி 9) வினிதா (29)

You may also like...