தூத்துக்குடி இணைய சேவை துண்டிப்பு, தொடர்ந்து நிகழும் துப்பாக்கி சூடு இன்றும் ஒரு வாலிபர் பலி

wait loading cinibook video

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர் துப்பாக்கி சுடு அரங்கேறும் அவலநிலை இன்னும் மாறவில்லை. போராட்டத்தின் 100வது நாளான நேற்று போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்று போலீசார் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொடூர கொலை சம்பவத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது. இந்த சம்பவத்தில் நேற்று 12பேர் இறந்தனர் மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் அவர்களில் சிலரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இவையனைத்துக்கும் மேலாக இந்த வன்முறையின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை தொடர்ந்து இன்றும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. துப்பாக்கி சூட்டின் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு திரண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களை கலைக்கும் பொருட்டு இன்று காலையில் லேசான தடியடி நடத்தினர் அதற்கும் கூட்டம் கலையவில்லை என்று மீண்டும் துப்பாக்கிசூடு நடத்த ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தில் 22வயது காளியப்பன் என்ற வாலிபர் உயிரிழந்தார்,  இதை தொடர்ந்து இறந்தவர்களது எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் இணையதளம் மூலமாக தகவல் உடனடியாக பரவுகிறதென்று அந்த மாவட்டம் முழுவதும் இணையதள சேவை துண்டிப்பு இதனால் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அனைவரும் கடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அணைத்து அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ்நாட்டு பொதுமக்கள், திரைத்துறையினர் எதிர்ப்புகளையும் மீறி இன்றும் துப்பாக்கி சூடு அரங்கேற்றியிருக்கிறது இதற்கெல்லாம் யார் அதிகாரம் கொடுப்பது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். நாம் தேர்ந்தெடுத்து கூட முதல்வர் ஆகாத ஒருவர் நம்மளையே சுட்டு வீழ்த்த அவரது அதிகாரம் இல்லாமல் இவ்வளவு நடந்திருக்க வாய்ப்பே இல்லை, இது ஒரு மாபெரும் குற்றமாக கருதப்படுகிறது. நியாமான கோரிக்கையை முறையாக பரிசீலனை செய்யவேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக வைக்கப்படுகிறது.

இந்த நியூஸ் பற்றிய உங்களது தகவல்கள் மற்றும் கருத்துக்களை கிழே உள்ள comment boxல் பதிவு செய்யவும்.

You may also like...