டிக் டிக் டிக் திரைவிமர்சனம், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜிஸ்

wait loading cinibook video

India’s First Space Film : ‘Tik Tik Tik’ directed by Shakti Soundar Rajan promises to take you on a journey like never before! Starring Jayam Ravi and Nivetha Pethuraj , ‘Tik Tik Tik’ is produced by Nemichand Jhabak with music by D.Imman. Get ready for this outer space visual splendor filled with meteorites, satellites, asteroids and much more!

கதைக்களம் 

டிக் டிக் டிக் படம் ஒரு புதிய பரிமாணத்தில் முதல் முதலில் தமிழில் வெளிவந்து உள்ளது. இந்த படம் ஒரு விண்வெளி சம்பந்தப்பட்ட படம். படத்தில் ஆரம்பித்தில் சென்னையில் ஒரு பெரிய விண்கல் வந்து விழுவது போலவும், அதனால் ஒரு சில பேர் இறந்து விடுவது போல கட்டப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இதை விட ஒரு பெரிய பாதிப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைத்திருக்கு வர போவதாக தெரிகிறது. அங்கேயும் ஒரு பெரிய விண்கல் விழப்போவதாக தகவல் வருகிறது. அப்படி நடந்தால், தமிழகம், ஆந்திரா மற்றும் இலங்கை அழிந்து விடும் என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிருவனத்தில் பணிபுரிபவர்கள் இந்த பெரிய ஆபத்தை தடுக்க ஒரு பெரிய டீம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்து ,விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் திறமையானவர்கள் சிலரை தேர்தெடுத்து அனுப்புகினறனர். அந்த விண்வெளி வீரர்களுடன், மெஜிசிஷியன் மற்றும் திருடராக இருக்கும் ஜெயம் ரவியும் அவர்களுடன் விண்வெளிக்கு அனுப்பிக்கின்றனர். அவர்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று, அந்த விண்கல்லை உடைத்து அதை திசை திருப்புவார்களா ??? மக்களை எப்படி காப்பாறுவார்களா??? அவர்கள் பத்திரமாக விண்வெளியில் இருந்து இந்தியா திரும்புவர்களா??? என்பது தான் படத்தின் கதை…..

திரைவிமர்சனம்

தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் எடுத்திராத புதிய முயற்சி எடுத்து அதை வெற்றிகரமாக மக்கள் முன்னால் கொண்டு வந்ததிருக்கு முதலில் சக்தி சௌந்தர்ராஜனை பாராட்டியே ஆகவேண்டும்.  தமிழில் ஒரே மாதிரியான கதைக்களத்தை பார்த்து பழகிய மக்களுக்கு இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயம் ஒரு புது அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மாதிரியான ஒரு வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்த ஜெயம் ரவிக்கு பாராட்டுகள்.

படத்தில் நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுன் மற்றும் கேப்டன் வின்செண்ட் என அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாத காட்சிகள் வருவது கொஞ்சம் எரிச்சல் அடைய செய்கிறது. ஆதாவது, விண்வெளி வீரர்கள் செய்ய முடியாததை, விண்வெளி அனுபவமே இல்லாத ஜெயம்ரவி செய்து முடிப்பது என்பது தான் இதில் மக்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இந்த படத்தில் இந்த மாதிரி பல இடங்களில் லாஜிக் இல்லாமல் எடுத்து உள்ளார் சக்தி. படத்தின் முதல் பகுதி அவர்கள் விண்வெளி செல்வதை எடுத்து உள்ளனர். எனவே, முதல் பகுதி ரொம்ப விறுவிறுப்பாக செல்கிறது . இரண்டாவது பகுதி முழுவதுமே விண்வெளியில் இருப்பது போல காட்டப்பட்டு உள்ளது.

விண்வெளி என்பதால் இரண்டாவது பகுதியில் கதை கொஞ்சம் மெதுவாக செல்வது போல தோன்றும். படம் முழுவதுமே பின்னணி இசையில் இமான் கலக்கி உள்ளார். இமான் இசை படத்திற்கு உயிர்கொடுத்து உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. படத்திற்கு இசை ஒரு பக்கம் பலம் சேர்க்க, மறுபக்கம் ஒளிப்பதிவு ரொம்ப சிறப்பாக அமைத்து உள்ளார் வெங்கடேஷ். படத்தை பார்க்கும் அனைவரையும் விண்வெளிக்கு அழைத்து சென்று உள்ளார் சி.வெங்கடேஷ். அந்த அளவுக்கு ஒளிப்பதிவு ஹாலிவுட் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம்.
எப்பவும் விண்வெளி சம்பந்த பட்ட படம் என்றாலே நம்ம அனைவருக்கும் ஹாலிவுட் படமான gravity, இன்டெர்ஸ்டெல்லார் போன்ற படங்கள் தான் நினைவுக்கும் வரும். அந்த வரிசையில் இப்ப தமிழ் படமான “டிக் டிக் டிக்” படம் அமையும் என்று சொல்ல முடியாது . ஆனால், 60 சதவீதம் ஒத்து போகும். ஹாலிவுட் படங்களில் உள்ளது போல எதிர்பார்த்து இந்த படத்தை பார்த்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும். லாஜிக் எதுவும் எஎதிர்பார்க்காமல் இந்த படத்தை ஒரு பொழுது போக்கிற்க்காக பார்த்தால் நல்ல இருக்கும் என்பது எனது கருத்து.
தமிழ் திரையுலகில் விண்வெளி சார்ந்த படத்தை எடுத்து மக்கள் புரியும் வண்ணம் படமாக்கி கொடுத்தத்திருக்கு சக்தி சௌந்தர்ராஜனுக்கு மீண்டும் ஒரு பெரிய பாராட்டு. வெங்கடேஷின் ஒளிப்பதிவு , இமான் இசை படத்திற்கு பெரிய தூண் என்று சொன்னால் மிகையாகாது. குறைந்த பட்ஜட்டில் படத்தை எடுத்து கொடுத்த தயாரிப்பாளருக்கும் பாராட்டுகள்.

டிக் டிக் டிக் மதிப்பெண்

டிக் டிக் டிக் படத்திற்கு சினிபுக் கொடுக்கும் மதிப்பெண்:-2.9

Movie cast and crew

Directed by Shakti Soundar Rajan
Produced by V. Hitesh Jhabak
Written by Shakti Soundar Rajan
Starring Jayam Ravi
Nivetha Pethuraj
Ramesh Thilak
Aaron Aziz
Music by D. Imman
Cinematography S. Venkatesh
Edited by Pradeep E Ragav
Production
company
Nemichand Jhabak
Distributed by Sri Thenandal Films
Release date
  • June 22, 2018[1]
Running time
130 minutes
Country India
Language Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *