என்னது??? துருவ நட்சத்திரம் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறதா????

wait loading cinibook video

 

 விக்ரம்  நடிப்பில் கெளதம் மேனன்  இயக்கத்தில் துருவ நட்சத்திரம்  படம் படப்பிடிப்பில் உள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருஷத்திற்கு மேலாக அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  இடையில் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டு டீஸர் வெளியாகி உள்ள நிலையில்,  தற்போது மீண்டும் ஒரு டீஸர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிக வேகமா பரவி வருகிறது.  இப்ப வந்து உள்ள டீஸர் இல் சிம்ரன், ராதிகா மற்றும் பார்த்திபன் ஆகிய பிரபலங்கள் வருகிறார்கள். டீஸர் 3 முழுவதுமே தூப்பாக்கி சூடு தான் பார்க்க முடிகிறது. இதுவரை வெளியிட்டுள்ள  teaser மூன்றுமே வைத்து பார்க்கும் போது படம் ரொம்பவே ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்த அளவுக்கு காட்சிகள் காட்டப்படுகின்றன .படபிடிப்பு முழுவதுமே அமெரிக்காவில் தான் என டீஸர் பார்த்தாலே தெரிகிறது   கெளதம் எப்பவுமே, காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் பண்ணுவார். ஆனால், தற்போது அந்த இமேஜ்-யை மாற்றுவார் போல தெரிகிறது. ஏன் என்றால், தற்போது இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படம் ஒரு spy thriller  படமாம்.

இந்த படத்தில் தெலுங்கு நடிகை  ரித்து வர்மா ( ritu varma ) மற்றும்  ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துஉள்ளனர். இவர்கள் இரண்டு பேரில் விக்ரம் ஜோடி யாருனு தெரியல???. இசை ஹாரிஸ் ஜெயராஜ். இதுவரை எந்த படத்திருக்குமே இப்படி 3 டீஸர் வெளியிட்டது இல்லை. துருவ நட்சத்திரம் படத்திருக்கு இதுவரை 3 டீஸர் வெளிட்டு உள்ளார் கெளதம். அவர் எப்ப தான் படத்தை முடித்து வெளியிடுவார் என மக்கள் அனைவருமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர்.இப்படி டீஸர் வெளியிட்டு கெளதம் மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டுகிறார் என்றே சொல்லாம். கெளதம் சார் சீக்கிரமே துருவ நட்சித்திரம் படத்தை முடித்து படத்தை வெளியிடுங்கள்  இதுவே மக்களின் விருப்பம்……

 

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *