துப்பாக்கிக்கு பிறகு துப்பாக்கி முனை -விக்ரம் பிரபு நடிப்பில் கலைப்புலி தாணுவின் அடுத்த படம் ……

விக்ரம் பிரபு நடிப்பில் இன்று வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீஸர் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விக்ரம் பிரபு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். விக்ரம் பிரபுவின் முதல் படமே (கும்கி) அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அடுத்து, அடுத்து நிறைய படங்களில் விக்ரம் நடித்தாலும், ஒரு சில படங்கள் அவருக்கு தோல்வியைக் கொடுத்தது என்றே கூறலாம். ஆனால், தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த “60 வயது மாநிறம்”படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இருந்ததால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மீண்டும், “துப்பாக்கி முனை” படத்தில் தாணுவும், விக்ரம் பிரபுவும் இணைகின்றனர்.
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் தாணுவின் வி .கிரியேஷன் தயாரிப்பில் துப்பாக்கி முனை படத்தில் விக்ரம் ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். எம் .எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி என பலர் நடித்துள்ளனர். எல்.வி முத்துகணேஷ் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தின் டீஸர் பார்க்கும் போது படம் ஒரு ஆக்ஷன் – திரில்லர் படம் என்பது தெரிகிறது.

மேலும், இதுவரை பார்க்காத விக்ரம்பிரபுவை இந்த படத்தில் பார்க்கலாம். அந்த அளவுக்கு ரொம்ப ஸ்டைலா நடித்துள்ளார். அதனால், “துப்பாக்கி முனை” படத்தின் டீஸர் மக்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, என்று சொல்லலாம். ஏற்கனவே, கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஆளவந்தான், காக்க காக்க,தொட்டி ஜெயா, துப்பாக்கி மற்றும் தெறி இவை அனைத்துமே வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களின் வரிசையில் “துப்பாக்கி முனை” அமையும் என்பதில் சந்தேகம் இல்லை……………….பார்ப்போம், படம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா???? விக்ரம் பிரபுவின் புது தோற்றத்தை பார்க்கலாமா??? என்பது படம் வெளிவந்தவுடன் தான் தெரியும்.

You may also like...