
thulasi- medicinal benifits
துளசியின் அற்புதமான மருத்துவ குணங்கள்:-
Amazing Medicinal Properties of Tulsi:-
துளசி மாடத்தை இறைவனின் இருப்பிடமாக கருதுவோர் பலர். காக்கும் கடவுளின் வடிவமான துளசி, உடலை நோயின்றி காக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இந்த துளசியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.

- துளசி மழை மற்றும் குளிர் காலங்களுக்கு ஏற்ற ஒரு அருமருந்து. ஏனென்றால், மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக ஏற்படும் ஒரு பிரச்னை சளி மற்றும் வைரஸ் காய்ச்சல். இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரையும் அவதிப்படுவர். சளி மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு துளசி இலை சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்துக் லேசாக சுட வைத்து குடித்தால் காய்ச்சல், சளி உடனே குணமாகும். துளசி வைரஸை எதிர்க்கும் ஆற்றலும், அதனை செயலிழக்கும் தன்மைக்கொண்டவை.
- பசும்பாலுடன் துளசி இலை 5 எடுத்து நன்கு கொதிக்க வைத்து பருகிவர நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்.
- மிளகு,வெள்ளைப்பூண்டு, திப்பிலி, வெள்ளைக்குன்றுமணிவேர், கண்டகத்திரி மற்றும் வெள்ளைசசாரணை வேர் இவை எல்லாவற்றிலும் சம அளவு ௫ கிராம் வரை எடுத்து இதனுடன் துளசி இலையும் சேர்த்து நன்றாக மைப்போல அரைத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பெண்கள் மாதவிலக்காகி மூன்று நாட்கள் கழித்து காலை மட்டும் ஒரு வேலை குடிக்க வேண்டும் அப்படி குடித்தால் கர்ப்பப்பையில் உள்ள பூச்சி, கிருமிகள் அழிந்து விடும். உடனே கர்ப்பம் தரிக்க வாய்ப்பு அதிகரிக்கும்.
- துளசி இலைச்சாறு எடுத்து ஒரு துளி காதில் விட காத்து வலி தீரும்.
- துளசி இலைச்சாறுடன் சிறுது இஞ்சி சாறும் கலந்து காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேளை மட்டும் சாப்பிட்டால் வாயு தொந்தரவு உடனே நீங்கும் .
- துளசி இலையை எலுமிச்சம் பழசாறு கலந்து மைப்போல அரைத்து வண்டு கடித்த இடத்தில போட்டால் விஷம் உடனே இறங்கி சரியாகும்.
மேலும், கடுமையான விஷக்காய்ச்சலுக்கு துளசி சாறுடன் சிறு தேன் கலந்து பருகிவர விரைவில் காய்ச்சல் சரியாகும்.
- துளசி எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை. அதனால், துளசி ஏழைகளின் கசாயம் எனலாம். பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுப்பார்கள் அல்லவா..நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதே போல நாமும் துளசியை நீரில் போட்டு ஊறவைத்து அதை தொடர்ந்துக் குடித்து வந்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.