சென்னையில் IT ஊழியர்கள் போராட்டம்- “ரூ.10 லட்சம் வேண்டும், எங்களையும் சுடுங்கள் ” என்ற கோஷத்துடன்!!!

வலுக்கும் போராட்டம்:-

தூத்துக்குடியியல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100 ஆவது நாள் MAY -22 போராட்டத்தில் நடந்த தூப்பாக்கி சூட்டில் 9 பேர் வீர மரணம் அடைந்தனர். அமைதியான வழியில் போராடிய மக்களை போலீஸ் குருவியை சுடுவது போல் சுட்டுள்ளனர். மேலும் நேற்று மருத்துவமனை முன்பு மக்கள் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து போராடியுள்ளனர். அங்கேயும் கூடவா சுட வேண்டும்???. தன் உறவினர்களை இழந்த சோகத்தில் உள்ள அவர்களை விரட்டிய போலீஸ், ஒருகட்டத்தில் மீண்டும் சுட ஆரம்பித்தனர் . அந்த  தூப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். தற்போது பலி எண்ணிக்கை 13 -ஆக உயர்ந்து உள்ளது . பலரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதை கேக்கையில் நெஞ்சம் பதைக்கிறது……. அந்த மக்கள் போராடுவது எதற்காக??? மக்கள் உயிரை காவும் வாங்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தானா??? இந்த அரங்கம் மக்களுக்காக உள்ளதா? இல்லை???  வெளிநாட்டில் இருக்கும் கார்ப்ரேட் கம்பெனிக்கவாக???

இத்தனை நடந்த பிறகும் கூட, அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லாமல் இருந்தது.  கிட்டத்தட்ட  இரண்டு நாட்களுக்கு பிறகு  இன்றைக்கு தான் தூத்துக்குடியில் நடந்த தூப்பாக்கி சூடு பற்றி விளக்கம் அளித்து உள்ளார், முதலமைச்சர் எடப்பாடி.  அவர் அப்போதும் அங்கு  நடந்த  துப்பாக்கி சூட்டை நியாப்படுத்தி பேசுகிறார்.  இதுயெல்லாம் ஒரு அரங்கமா??  மேலும், இந்த அரசாங்கம் களைய வேண்டும் என பல தரப்பினரும் கூறுவது மட்டும் அல்லாமல் பல இடங்களில் (தூத்துக்குடி மக்களுக்காக) போராட்டம் வெடித்து உள்ளது…
    அதன்படி இன்று சென்னையில் எதிர் கட்சி தலைவர் “ஸ்டாலின் ”  தூத்துக்குடியில்  நடந்த படுகொலையை கண்டித்தும், கொலைக்கார எடப்பாடி அரசு களைய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராடினர்.  அவரை போலீஸ் கைது செய்தது.  இதுவும் அரசியல் தான்….. பொது மக்கள்  பலரும் ஸ்டெர்லைட்டை மூடக்கோரி பல இடங்களில் போராடத் தொடங்கி உள்ளனர்.

 

 

   தற்போது கூட சென்னையில் IT  ஊழியர்கள்  சென்னை-திருச்சி  தேசிய  நெடுஞசாலையில் போராடி வருகின்றனர். அவர்கள் “எங்களுக்கும் 10 லட்சம் கொடுங்கள், எங்களையும் சுடுங்கள் ” உறுதியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோசம் இட்டும், அட்டையை கையில் ஏந்தி  போராடி வருகின்றனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை  மூடும்  வரை  தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறி உள்ளனர்.  இங்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் மூலை முடுக்கில் எல்லாம் போராட்டம் வெடிக்க வேண்டும். அப்போது தான் ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூட வழிபிறக்கும். ஸ்டெர்லைட்க்காக தூத்துக்குடியில் வீர மரணம் அடைந்த நம் உறவினர்களின் ஆத்துமா சாந்தி அடையும்… மேலும் அவர்களின் வீர மரணம் பற்றி அனைவரும் பிற்காலத்தில் பேசப்பட வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் தமிழ்நாட்டுக்கு…….என்பதில் சந்தேகம் இல்லை!!!!!