திமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு????

கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் திமிரு பிடிச்சவன் படம் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னாள் விஜய் ஆண்டனி நடித்த அண்ணாதுரை மற்றும் காளை போன்ற படங்கள் அவருக்கு தோல்வியை தந்தது. இப்படம் எப்படி வந்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க…..

கதைக்கரு:-

.

 

 

விஜய் ஆண்டனி இப்படத்தில் இதுவரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த விஜய் ஆண்டனி போலீஸ் ஆகா வருகிறார். இவருக்கு ஒரு தம்பி. எதையும் குறுக்கு வழியில் பெற நினைக்கும் விஜய் ஆண்டனியின் தம்பி, அவரை கண்டித்துக்கொண்டே இருக்கும் விஜய் ஆண்டனி. முதலில் விஜய் ஆண்டனி கான்ஸ்டபிலாக வருகிறார். அவர் தன்னுடைய தம்பியை திருத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கிடையில், அவர் தம்பி சென்னை சென்று ஒரு பெரிய தாதாவிடம் சேர்ந்து அவர் ரவுடியாகிறார். தன் தம்பியை தேடிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி சப் இன்ஸ்பெக்டராக சென்னை செல்கிறார். அப்போது, ஒரு கொலை நடக்கிறது. கொலை சம்பவமாக விஜய் விசாரிக்கும் போது தான் தன் தம்பி அந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது. அவர் தன் தம்பி என்றுக் கூட பாராமல் கொலை செய்த கொலையாளியை என்கவுட்டர்(encounter) செய்து விடுகிறார்.

இதற்கிடையே, சப் இன்ஸ்பெக்டராக வரும் நிவேதா பெத்துராஜுடன் காதல் வயப்படும் விஜய் ஆண்டனி. இறுதியில் தன தம்பியை ரவுடியாக்கிய தீனாவுடன் மோதி ஜெயித்தாரா இல்லையா??? என்பது தான் கிளைமேஸ்.

திரைவிமர்சனம்:-

இயக்குனர் கணேஷா நல்ல கதாபாத்திரத்தை எடுத்து சொல்லியுள்ளார். விஜய் ஆண்டனி இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் சுமாராக தான் நடித்துள்ளார். படத்தின் தலைப்புக்கு ஏற்ப திமிரு பிடிச்ச போலீசாக வரவேண்டிய விஜய் ஆண்டனி அவர் ஸ்டைலில் எப்பவும் போல உம்முனு முறைப்பாக வருகிறார்.

படம் ஆரம்பித்தில் ரொம்ப மெதுவா போற மாதிரி இருக்கும். இண்டெர்வலுக்கு பிறகு கொஞ்சம் விறுவிறுப்பாக செல்லும். நிவிதாபெத்துராஜ் கெத்தா நடித்துள்ளார். நிவேதாவின் குறும்பான நடிப்பில் அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும், அவரின் குறும்புத்தனமான காமெடியில் கலக்கியுள்ளார்.
விஜய் ஆண்டனி இந்த படத்தில் ஹீரோவாக, தயாரிப்பாளராக, மற்றும் இசைஅமைப்பாளராக வலம் வந்துள்ளார்.ஆனாலும் அனைத்திலும் அவர் ரசிகர்களை மனம் நிறைய வைக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் அவர் முயற்சித்திருக்கலாம்.

படத்தில் ஒரு பாடல் மட்டும் மனம் நிறைய வைத்துள்ளது எனலாம். படத்தில் பின்னணி இசை கூட சுமாராக வந்துள்ளது. படத்தில் போலீஸ் பற்றிய ஒரு நல்ல எண்ணம் வரும் அளவுக்கு காட்டியுள்ளார் இயக்குனர் கணேஷா. நிவேதா பெத்துராஜ் நடிப்பு கலக்கல்…..

  சினிபூகின் மதிப்பெண்:-  2.4/5

You may also like...