தெர்மோகோல் வச்சு இன்னும் என்ன என்ன செய்வாங்களோ..??? கட்டிட தொழிலில் புது முயற்சி……!!!!!

wait loading cinibook video

வீட்டை கட்டி பாரு கல்யாணம் பண்ணி பாரு என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது இருக்கிற விலைவாசி உயர்வால் வீடு கட்டுவது என்பது கல்யாணம் பண்றத விட ரொம்பவே சிரமமாக உள்ளது எனலாம். வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருள்களின் (மணல்,கம்பி மற்றும் சிமிண்டு) விலை வேகமான வேகத்தில் அதிகரித்து வரும் போது, ​​வீட்டு உரிமையாளர் பலருக்கு வீடு கட்டுவது ஒரு தொலைநோக்கு கனவாகிவிட்டார். அதனால், தற்போது நம்ம தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள புதிய முறை என்வென்றால், மறுசுழற்சி செய்யக்கூடிய கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்துதல் மூலம் கட்டுமான நேரத்தைத் தக்கவைத்தல் மற்றும் கட்டுமான செலுவும் குறையும் என்கின்றனர்.

ந்த முறையை மனதில் வைத்து தமிழ்நாடு போலீஸ் ஹவுஸ் கார்ப்பரேஷன் (TNPHC) சமீபத்தில் வலுவூட்டப்பட்ட தெர்மோகாலை பயன்படுத்தி ஒரு வீடு கட்டியுள்ளது. மறுசுழற்சி மூலம் உருவாக்கப்பட்ட கட்டிடப் பொருட்களான தெர்மோகோலை பயன்படுத்தி, 40 நாட்களுக்குள் மாநகராட்சிக்கு ஒரு மாடிக் கட்டடம் கட்ட முடிகிறது என்கின்றனர் கட்டிட பொறியாளர்.

தெர்மோகோல் வச்சு இன்னும் என்ன என்ன செய்வாங்களோ..??? கட்டிட தொழிலில் புது முயற்சி......!!!!!

இப்படி கட்டப்படும் வீடு எப்பவும் செங்கலை வைத்து கட்டப்படும் வீடு போலவே காட்சியளிக்கிறது என்றால் நம்ப முடிகிறது. அது மட்டும் அல்லாமல் செங்கல் கட்டிடத்தை விட நேரம் குறைவு மேலும் கட்டிட செலுவு 20 அல்லது 30 சதவீதம் குறைகிறதாம். செங்கலை வைத்து காட்டும் கட்டிடத்தை விட வலிமையாகவும், விரிசல் இல்லாமலும் இருக்கும் என்கிறாரகள் கட்டிட பொறியாளர்கள்….

கட்டிட தொழிலில் இது ஒரு புது முயற்சி……!!!!!

Leave a comment

You may also like...