
thalapathy-68 movie update
தளபதி விஜய்-68 படத்தின் புதிய அப்டேட் -இயக்குனர் யார் தெரியுமா???
New Update of Thalapathy Vijay-68 – Do you know who the director is???
தளபதி விஜய் -68 படத்தை அட்லீ இயக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது….
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் “லியோ”. கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் வித்தியாசமான காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார் என்பது மேலும் சிறப்பம்சம். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது.
இப்படத்திற்கு பிறகு விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கப்போவதாவாக தகவல் வெளிவந்தது. பிறகு தெலுங்கு இயக்குனர் கோபிசந்து இயக்கப்போவதாக தகவல் வந்தது. தற்போது இவர்கள் யாருமே இல்லையாம்.
விஜய்யின் 68-ஆவது படத்தை அட்லீயும் இயக்கவில்லை, தெலுங்கு இயக்குனர் கோபிசந்துவும் இயக்கவில்லையாம். வேறயார் தான் இயக்குகிறார்?? விஜய் -68 படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் அவர்கள் தான் இயக்கப்போவதாக தற்போது புதிதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தை குட்பில்ம்ஸ் தயாரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை பற்றிய மற்ற தகவல்கள் தளபதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 22 -ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. எனவே, அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தால் தான் தெரியும் யார் தளபதி -68 படத்தை இயக்கப்போகிறார் என்று…???