என்னது??? நடிகர் அஜித்துக்கு அப்துல்கலாம் விருதா !!!!!

நடிகர் அஜித் ஆலோசகராக உள்ள தக்ஷா குழுவுக்கு அப்துல்கலாம் விருது வழங்கி சிறப்பித்து உள்ளது தமிழக அரசு………….
சென்னையில் M. I .T கல்வி நிறுவனத்தில் வான்வெளி பிரிவை சேர்ந்த  “தக்ஷா”  குழுவிற்கு நடிகர் அஜித் அவர்கள் தான் ஆலோசகராக இருக்கிறாராம். இந்த குழு ஆளில்லா விமானம் தயாரித்து வருகிறது. நடிகர் அஜித் நேரம் கிடைக்கும் போதேல்லாம் M. I .T சென்று தன்னுடைய குழுவிற்கு தேவையான ஆலோசனை வழங்குவாராம். மேலும், அந்த குழு மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஒன்று  குரங்கணி தீ விபத்து, திருவண்ணாமலை கிரிவலம், என்று பயன்படுத்தப்பட்டது. வட மாநிலங்களில் வெள்ள சேதம் ஏற்பட்ட போதும் பேருதவி புரிந்து உள்ளது இந்த ஆளில்லா விமானம்.

அது மட்டும்அல்லாமல், மேலும் பல சேவைகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. அடுத்து மருத்துவமனைகளில் ஆளில்லா விமானம் பயன்படுத்தி விரைவில் சிகிச்சைக்கு தேவையான உறுப்புகளை குறைந்த நேரத்தில் தடங்கல் இல்லாமல் கொண்டு வரவும், எங்கும் எடுத்து செல்லவும் முடியும்.  விரைவில் அதற்கான ஒரு ஆளில்லா விமானத்தை தக்ஷா குழு வழங்க உள்ளது.  இவ்வாறு பல சமூக சேவைகளுக்கு பயன்படுத்தபடும் இந்த ஆளில்லா விமானத்தை உருவாக்கிய M. I .T நிறுவனத்தை சார்ந்த தக்ஷா குழுவுக்கு அப்துல்கலாம் விருது வழங்கி உள்ளது.

     72 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு பலர்க்கும் விருது வழங்கி சிறப்பிக்கும். அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 15) M. I .T நிறுவனத்தை சார்ந்த தக்ஷா குழுவுக்கு முதல்வர் பழனிசாமி அப்துல்கலாம் விருது வழங்கி சிறப்பித்து உள்ளார். நடிகர் அஜித் மிக ஆர்வமாக இருந்து அந்த குழுவிற்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.   இன்னும் அந்த குழுவிற்கு நடிகர் அஜித் தான் ஆலோசகர் என்பதில் மிக பெருமையாக உள்ளது. நடிகர் என்பது மட்டும் அல்லாமல் பல திறமைகளுடன் இருக்கும் அஜித்தின் இந்த சேவை தொடர வேண்டும்

You may also like...