தமிழ் படம் 2.0 திரைவிமர்சனம், மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன்

wait loading cinibook video

2010ல் மிர்ச்சி சிவா நடிப்பில், சிஎஸ் அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் மிகவும் பிரபலமடைந்தது அதில் வரும் பச்சை மஞ்ச கருப்பு தமிழன்டா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது மேலும் படம் நல்ல வசூலயும் பார்த்தது 3.5கோடி செலவில் உருவாகிய இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் மட்டும் 10கோடியை தாண்டியது. இதை தொடர்ந்து அப்போதே இந்த படத்தின் டைரக்டர் சிஎஸ் அமுதன் இதன் 2ம் பாகத்தை உறுதிசெய்தார்.

டிசம்பர் 2017ல் படத்தின் பூஜை ஆரம்பித்து, சூட்டிங் வேலைகள் தொடங்கின, அதன் பிறகு இந்த படத்தின் இரண்டு பஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகின அதில் அப்போதைய முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் தியானம் செய்த கட்சி போல் சித்தரித்து பஸ்ட் லுக் புகைப்படம் இருந்தது, இந்த நிலையில் தற்போது இந்த படம் வெற்றிகரமாக வெளிவந்துள்ளது. படத்தில் பலரையும் ஒட்டி தள்ளியுள்ளார் அதிலும் இப்போதைய துணை முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வத்தை விட்டுவைக்க விலை மற்றும் மங்காத்தா, துப்பறிவாளன், விக்ரம் வேதா போன்ற பிரபலமான படங்களையெல்லாம் ஓட்டி தள்ளியுள்ளது போல் தெரிகிறது. ஒருவழியா படக்குழு நினைத்தது போல் அதிகம் பேசப்பட்டு தற்போது வெளியிட்டுவிட்டது, ஆனால் படம் எப்படி இருக்கும்னு பார்க்கலாம் வாங்க…

கதை களம் 

கதாநாயகர் சிவா., போலீஸ் வேலை யோரடித்ததால் அதற்கு போகாமல் வீட்டில் ஒய்வில் இருக்கிறார். படுபயங்கர வில்லன் பி.எனும் ‘காமெடி’சதீஷால் ., தன் ஆசை. மனைவி பார்சல் பாம் வெடித்து அகால மரணமடைந்ததும் ., வேறு வழியின்றி .,வில்லனை ஒழித்துக்கட்டும் வெறியுடன் சிவா ., அண்டர் கவர் காப் எனப்படும் ரகசிய போலீஸ் ஆகி ., வில்லன் குரூப்பை ஓட விட முயற்சிக்கிறார். அதனால் தன் ஆசை காதலியையும் இழக்சிறார். அதன் பின் வில்லன் சதிஷையும் அவன் வழி நடத்தும் சர்வதேச தீவிரவாதி கூட்டத்தையும் சின்னாபின்னமாக்கும் சிவா கண் எதிரிலேயே பீனிக்ஸ் பறவை மாதிரி மீண்டும் உயிருடன் சதீஷ் வர சிவா குழப்பமாகிறார். அந்த நேரம் தன்னை போதிதர்மர் என சிவாவிடம் அறிமுகம் செய்து கொள்ளும் ஒரு சாமியார் ., ? “நீ அவ்வளவு எளிதில் சதீஷை தீர்த்து கட்டி விட முடியாது ….காரணம் உனக்கும் சதிஷுக்கும் , 76 பிறவிகளாக பகை.டைம்மிஷின் வாயிலாக 3000 ஆண்டுகளுக்கு முன்பு சென்று சதிஷை தீர்த்து கட்டினால் தான் உண்டு ….”என்று போட்டுத் தாக்க ., 3000 ஆண்டுகளுக்கு முன்பு போகும் சிவா ., சதிஷை சந்தித்தாரா ? தீர்த்து கட்டினாரா ..? தற்காலத்திற்கு திரும்பினாரா …? என்பது தான் “தமிழ் படம் – 2 ” படத்தின் கதையும் களமும்.

காட்சிப்படுத்தல்

சிவா , ஐஸ்வர்யாமேனன் , சதீஷ். நிழல்கள் ரவி , மனோபாலா , ஆர்.சுந்தர்ராஜன் , சந்தானபாரதி , கலைராணி , கஸ்தூரி , சேத்தன் , அஜெய் ரத்னம் , ஒ.ஏ.கே.சுந்தர் , ஜார்ஜ் , திஷா பாண்டே , கார்த்திகேயன் ….
உள்ளிட்டோர் நடிக்க “ஒய் நாட் ஸ்டுடியோஸ் “சசிகாந்த் தயரிப்பில் , கே.சந்துருவின் வசனவரிகளில் , செந்தில் ராகவனின் கலை இயக்கத்தில் , திலீப் சுப்பராயனின் சண்டை பயிற்சியில் , டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பில் ,கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் , என்.கண்ணன் இசையில் , சி.எஸ்.அமுதனின் எழுத்து , இயக்கத்தில் “ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் “ஆர்.ரவீந்திரன் வெளியீடு செய்ய , இயக்குனர், தயாரிப்பாளர் , நடிகர் உள்ளிட்டஇதே கூட்டணியின்முந்தைய “தமிழ் படம் “போலவே சமீபத்திய தமிழ் திரைப்படங்களையும் கூடவே இன்றைய தமிழக அரசியல் நிலவரத்தையும் கலாயத்து காட்சிப்படுத்தியிருக்கும் திரைப்படம் தான் “தமிழ் படம் – 2..”கதாநாயகர் : அண்டர் கவர் காப் எனப்படும் ரகசிய போலீஸ் சிவா மற்றும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பரத் முனி என் டூயல் ரோல்தான படத்தில் நாயகர் சிவாவுக்கு என்றாலும் படம் முழுக்க ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கெட்-அப்புகளில் பிச்சி பெட லெடுத்திருக்கிறார் மனிதர்.
முதல் சீனில் பெரும் போலீஸ் கூட்டத்தால் அடக்க முடியாத பெருங்கலவாத்தை பேசியே அடக்குவதில் தொடங்கி ., “கபாலி “ரஜினி கெட்-அப்பிலும் 24 சூர்யா மாதிரியும் வருவது வரை கலக்கியிருக்கிறார்கலக்கி .

மரம் ஏறி ,தேங்காய் பறிக்க முடியாமல் தவிக்கும் வயதான விவசாயிக்கு தன், ஜீப்பால் மரத்தை மோதி தேங்காய்களை கீழே விழ வைத்து சாகசம் காட்டுவதில் தொடங்கி ., அவரிடம் , ” நான் சாப்பிடுற ஒவ்வொரு தேங்காய் பர்பியும் விவசாயி பேரு தான் சொல்லும் … ” என “பன்ச் ” அடிப்பது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார் சபாஷ்!

கதாநாயகி : ரம்யா , காயத்ரி & கலசியாக ஐஸ்வர்யாமேனன், படத்தில் மூன்று பாத்திரங்களில் சிவாவுக்கு ஏற்ற ஜோடியாக சிறப்பித்திருக்கிறார்.

வில்லன் :பி & பியார் மற்றும் பாண்டி எனும் வில்லனாக காமெடி சதீஷ்., கர்ணகொடூரம்.

பிற நட்சத்திரங்கள் : இன்ஸ்’ இன்பசேகராக நிழல்கள் ரவி , சிவாவின் சேம் ஏஜ் பிரண்ட்ஸ் சித்தார்த் ஆக மனோபாலா , பரத்தாக ஆர்.சுந்தர்ராஜன் , நகுலாக சந்தானபாரதி , சிவாவின் பாட்டியாக கலைராணி , அயிட்டம் டான்ஸ் ராக கஸ்தூரி , கமிஷ்னர் ஏழுச்சாமியாக சேத்தன் , 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கிங் அதியமானாக அஜெய் ரத்னம் , வாசிம் கான் ஒ ஏ கே சுந்தர் , பரமு -ஜார்ஜ் , ப்ரியா வாக திஷா பாண்டே , கார்த்திகேயன் … உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்கள் மூலம் படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கின்றனர்.

தொழில்நுட்பகலைஞர்கள் கே.சந்துருவின் வசனவரிகளில் , “நான் ஒரு ட்ரிப் முடிவு பண்ணிட்டேன்னா., என் பேச்சை நானே கேட்க மாட்டேன் ….” எனும் சிவாவிடம் “அது ,ஒ.கே பட் என் பேச்சை கேட்கலாமுல்ல ..? ” எனும் சேத்தனின் நக்கல் , நையாண்டியில் தொடங்கி ,
பிற படங்களை ரொம்பவே மொக்கை பண்ணி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர் செந்தில் ராகவனின் கலை இயக்கத்தில் காட்சிகள் செயற்கை தனம் இல்லாமல் இருப்பது சிறப்பு.திலீப் சுப்பராயனின் சண்டை பயிற்சியி சிவாவுக்கு ஏற்ற அதிரடி . டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பில் , கத்தரி இன்னும் ஷார்ப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பது நம் கருத்து .

கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் , பெரிய குறையில்லை. என்.கண்ணன் இசையில் ., “நான் யாரும் இல்ல …. எதுவும் இல்ல …..”, “அட்றா அவனை .. வெட்றா அவனை ..எவடா உன்னை பெத்தா ….”, ” என் நடனம் நளினம் ,பதம் …”, “வா வா காமா …° உள்ளிட்ட சிறு மற்றும் பெரும் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கேற்ற பிரமாதம்.

பலம் : “தமிழ் படம் ” இரண்டாம் பாகம் என்பது …

பலவீனம் : பலவீனமும் “தமிழ் படம் ” இரண்டாம் பாகம் என்பதே …

இயக்கம் : சி.எஸ். அமுதனின் எழுத்து, இயக்கத்தில்., முந்தைய “தமிழ் படம் “போலவே சமீபத்திய தமிழ் திரைப்படங்களையும் கூடவே இன்றைய தமிழக அரசியல் நிலவரத்தையும் ரொம்பவே கலாயத்திருக்கும் “தமிழ் படம் – 2..” சில இடங்களில் கொஞ்சம் ஓவர் டோஸாக தெரிந்தாலும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை…. என்பதால் அலுப்பு ஏற்படவில்லை .

“அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா என டைட்டில் கார்டு” போடுவதில் ஆரம்பிக்கும் பிற பட கலாய்ப்பு ., ஒரு இட்லி போதும் கலவரம் அடக்க …..எனும் “கத்தி” பட கலாய்ப்பு ., “உனக்கு ‘வீரம்’னா என்னன்னு தெரியுமா ‘விவேகம்’ ன்னா என்னன்னு தெரியுமா ?, பல்கேரிய பாரஸ்ட்ல எச்சர்சைஸ் பண்றதுதான… விவேகம் .. ?” என்பது உள்ளிட்ட கலாய்ப்புகளும் “இறுதி சுற்று “ரித்திகா “வை அடித்திருக்கும் நக்கலும் ஒ.கே … என்றாலும் ஒவர் டோஸ்’.

படம் முழுக்க , ஜீவி பிரகாஷில் தொடங்கி , ரஜினி , கமல் வரை சகலரையும் சதாய்திருப்பது
இயக்குனரின் துணிச்சலைக் காட்டுகின்றன… என்றாலும் , ரசிகர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் .? ! என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் !

“நான் யாருமில்லை….” பாடஸில் “எனக்கு யூ சர்டிபிகேட் வேணும் , டேக்ஸ் ப்ரீ வேணும் , மாஸ் ஒப்பனிங் வேணும் … ” என பிற ஹீரோக்களையும் .,
“உனக்கு நடிக்கத் தெரியாது என்க்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாதுடா ….” இப்பட ஹீரோ சிவாவை யும் கலாய்த்திருப்பது சூப்பர்ப் !

பைனல்” பன்ச் ” : “தமிழ் படம் – 2′- ‘தமிழ் படம் -1 அளவுக்கு அல்ல’ என்றாலும் ., பெரிதாக , ‘தள்ளாடவும் இல்ல … என்பது ஆறுதல் !”

தமிழ் படம் 2.0 மதிப்பெண் 

இந்தப்படத்திற்கு சினிபுக்கின் மதிப்பெண் 5க்கு 2.9 கொடுக்கலாம்

Movie cast & crew

Directed by C. S. Amudhan
Produced by S. Sashikanth
Written by C. S. Amudhan,
K. Chandru
Starring Shiva
Disha Pandey
Iswarya Menon
Music by Kannan
Cinematography Gopi Amarnath
Edited by T. S. Suresh
Production
company
Y NOT Studios
Distributed by Trident Arts
Release date

July 2018

Country India
Language தமிழ்

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *