சூர்யாவின் NGK படத்தின் பெயர் விளக்கம் என்ன என்று தெரியுமா ???

நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்க்கு பிறகு அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற ஒரு சுருக்கெழுத்து கொண்ட தான். இந்த படத்தில் நடிகர் சூர்யா, சாய்பல்லவி, ராகுல் ப்ரீட்சிங் ஆகியோர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றார். இதன் முதல் பார்வை புகைப்படம் “தானா சேர்ந்த கூட்டம்” படம் ரிலீஸ் ஆனபோதே நவம்பர் 2017ல் வெளியானது. அதன் பிறகு ஜனவரி 2018 சூட்டிங் வேலைகள் துவங்கியது. சூர்யாவும் செல்வராகவனும் இணையும் முதல் படம் என்பதால் செல்வராகவன் கண்டிப்பாக சூர்யாவுக்கு ஒரு பிளாக் பஸ்டர் படமாக NGKவை கொடுப்பார் என்று சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தின் NGK என்னமோ வெறும் ஆங்கிலத்தில் லெட்டர் வைத்து படத்தின் பெயரை வைத்துள்ளனர் அது என்னவாக இருக்கும் என்று பார்த்தால் எல்லா படம் போல தான் இந்த NGKவின் விரிவாக்கம்  ஹீரோவுடைய பெயரின் சுருக்கெழுத்து தான் “நந்த கோபாலன் குமரன்” என்பது தான் இதன் முழு விளக்கம். இது படத்தின் பெயரை வைத்து பார்க்கும் போதும் சரி படத்தில் இருக்கும் இரு நடிகைகளை வைத்து பார்க்கும் போதும் சரி இந்த படம் ஒரு குறும்பு கலந்த காதல் கதை போல் தெரிகிறது. ராகுல் பரீட்சிங்கை தீரன் அதிகாரம் படத்திலே பார்த்திருப்போம் அதில் அவர் ஒரு குறும்பு தனமான வேடத்தில் தன வந்திருப்பார் அதுபோல் தான் இந்த படத்திலும் இருப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்த படத்தின் போஸ்டர் பார்த்தால் சூர்யா சேகுவேரா தோற்றத்திலும் இருக்கிறார் இது கொஞ்சம் ட்விஸ்ட் ஆகா தெரிகிறது ஒருவேளை சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ளாரோ எனவும் தோன்றுகிறது. அது என்ன என்று வருகிற தீபாவளி வரையும் காத்திருந்து பார்க்கலாம்.

You may also like...