
surya family -keeladi-controversy
Peoples are suffering for actor Surya keezhadi visit!! what happened?
நடிகர் சூர்யா குடும்பத்தால் அவதிக்குள்ளான பொதுமக்கள்!! நடந்தது என்ன?
நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகம் சென்றுள்ளார். அங்கு தான் பொதுமக்கள் அவதிக்குட்பட்டனர். …
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக அரசின் சார்பில் 10 கோடி செலவில் மிக பிரம்மண்டமான அருங்காட்சியகம் ஒன்று உருவாகியுள்ளது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால், கடந்த மாதம் திறக்கப்பட்டது. அருங்காட்சியகம் திறந்த நாளிலிருந்து சுமார் 30 நாட்களுக்கு பொதுமக்கள் இலவசமாக அருங்காட்சியகத்தைக் கண்டு வந்தனர். ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமையிலிருந்து அருங்காட்சியகம் காண பொதுமக்கள் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்து தான் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதுமட்டும் அல்லாமல் அருங்காட்சியகம் நேரம் காலை 10 மணியிலிருந்து மாலை 6 என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி விடுமுறை என்பதால் பள்ளி குழந்தைகள் மற்றும் அநேக பொதுமக்கள் காலை 9.30-க்கு வந்து விட்டனர். அருங்காட்சியகத்தின் வெளிப்புற கேட் மூடப்பட்டுஇருந்தது. அனைவரும் கையில் டிக்கெட் வைத்திருந்தும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை . கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்கள் கடும் வெயிலில் காத்திருந்தனர். இதற்கு காரணம் யார் தெரியுமா?
பிரபல நடிகர் சூர்யா தான். ஆம், நடிகர் சூர்யா அவருடைய குடும்பத்துடன் ஏப்ரல் 1- ஆம் தேதி அன்று கீழடி அருங்காட்சியகம் சென்றுள்ளார். காலை 9 மணியளவில் நடிகர் சூர்யா குடும்பத்தினருக்காக அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. நடிகர் சூர்யா குடும்பத்தினருடன் மதுரை எம். பி .வெங்கடேசன் அவரும் உடன் வந்திருந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுடைய குழந்தைகள் என குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை கண்டு வியந்தனர். அவர்கள் அனைவரும் உள்ளே பொறுமையாக அருங்காட்சியகத்தை கண்டு வந்தனர். உடன் சிவகுமார் மற்றும் எம்.பி வெங்கடேசனும் இருந்தார். இவர்கள் உள்ளே இருப்பதால் அருங்காட்சியகத்தை அடைத்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களும், குழந்தைகளும் கடும் வெயிலில் காத்திருந்தனர். தற்போது இந்த செய்தி தான் சமூகத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் சூர்யா படத்தில் மட்டும் தான் அனைவரும் சமம் என நடிப்பார் போல, உண்மையில் அவர் அனைவரும் சமமாக என நினைக்கவில்லை என பொதுமக்கள் சொல்லிக் கொண்டு வருகின்றனர். பொது இடத்தில் அனைவருக்கும் சமம் தான். மேலும் தமிழக அரசின் விதிமுறைப்படி 10 மணிக்கு தான் திறக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இப்படி வெயிலில் காக்க வைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. சூர்யா குடும்பத்தினர் அருங்காட்சியகத்தை விட்டு வெளிய சென்றவுடன் தான் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்…உண்மையில் இந்த நிகழ்ச்சி பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. பொது இடத்தில் அனைவரும் சமம் என்பதை கடைப்பிடிக்க வேண்டும்….