செந்தில் கணேஷ்க்கு தேடி வரும் பட வாய்ப்புகள்!!!!

இசைப்புயல் ரகுமான் இசையில் படப்போகும் மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ்க்கு அடுத்து அடுத்து வரும் வாய்ப்புகள் என்ன என்ன??? என்று பார்க்கலாம்………………………  

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் இறுதி சுற்று கடந்த ஜூலை 15 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முழுவ்துமே வெறும் நாட்டு புற பாடல்கள் மற்றும் பாடிய மக்கள் இசை பாடகர் என்று பெயர் பெற்ற செந்தில் கணேஷ் அவர்கள் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார் மற்றும் தனது பாடல்களிலும் மிகவும் பிரமாதமாக பாடி அசத்தினார்.. இறுதியில் அவரே முதல் பரிசான அருண் எக்ஸ்சல்லோ வழங்கும் 50லட்சம் மதிப்புள்ள வீட்டை தட்டி சென்றார். அதுமட்டுமல்லாது நாட்டுபுற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக செந்தில் கணேஷிற்கு அருண் எக்ஸ்சல்லோ 15லட்சம் ரூபாய் மதிப்புள்ள மற்றொரு வீடுவேறு கொடுத்துள்ளனர்.இதையடுத்து செந்தில் கணேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் ஏஆர் ரகுமான் இசையில் அவரது படத்தில் பாடல் வேறு  பாடவுள்ளனர் என்பது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி.

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ்க்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். அதாவது ரகுமான் இசையில் மட்டும் அல்லாமல், D.இமான் இசையில்  பாட போகிறராம்.   சிவா கார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் சீமராஜா. இந்த படத்தில் நம்ம செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாட போவதாக D.இமான் அவர்களே தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இசையமைப்பாளார் இமானின் ட்விட்டர் பதிவு

நம் ஊர் கிராமிய மணமிக்க நாட்டு புற பாடலை பாடி கிராமிய பாடலை இந்த காலத்து மக்களுக்கு கொண்டு சேர்க்க நினைக்கும் செந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி அவர்கள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். வாய்ப்புகள் வரும் போது அதை சரியாக பயன்படுத்தினால் போதும் வெற்றி தானாகவே கிடைக்கும் . செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஜோடிக்கு மிக பெரிய பாராட்டுகள்

You may also like...