Super Delux Review – Vijay Sethupathy, Samantha, Fahadh Faasil

wait loading cinibook video

சூப்பர் டீலக்ஸ், விஜய் சேதுபதி, சமந்தா, பாஹத் பாசில், ரம்யாகிருஷ்ணன், மிஸ்க்கின் போன்ற பெரிய நடிகர்களின் கலவைகளாக வெளிவந்துள்ளது. மிகுந்த இடைவெளிக்கு பிறகு(ஐந்து வருடம்) பிறகு “தியாகராஜன் குமாரராஜ்” இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய முதல் படமே(ஆரண்ய காண்டம்) நேஷனல் அவார்ட் வாங்கிய படம், இதனால் அனைவராலும் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது.

கதைச்சுருக்கம்

இந்த படத்தில் ஐந்து கதைகளை மையமாக வைத்து ஒரு கதை போன்று வடிவமைக்கப்பட்ட படம். படத்தின் ஆரம்பத்தில் சமந்தாவிற்கும், பாஹத் பாசிலிற்கும் இடையே ஒரு பிரச்சனை ஆரம்பிக்கிறது அதனை அவர்கள் எவ்வாறு சரிசெய்கிறார்கள் எனபது ஒரு பக்கம். அதனையடுத்து விஜய் சேதுபதியை நீண்டகாலமாக எதிர்நோக்கி காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினரை சந்திப்பது, அந்த சந்திப்பில் அவர்களுக்கு விஜய் சேதுபதி கொடுத்த அதிர்ச்சி என்ன எனபது ஒரு நகர்வாக இருக்கிறது.

மூன்றாவது கதைக்களமாக ஒரு ஐந்து 11வது வகுப்பு படிக்கும் மாணவர்களை வைத்து நகர்கிறது. நாம் அந்தவயதில் குரூப் ஸ்டடி படிக்கும் போது என்னென்ன தவறுகள் செத்தோமோ அவற்றை அவர்களும் செய்கின்றனார்கள். இவர்களிலிருந்து இருவர்மட்டும் நான்காவது கதைக்களத்தில் குதிக்கின்றனர். மீதமுள்ள மூவருக்கும் என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்பது ஒரு பக்கம்.

நான்காவது கதைக்களமாக 11வது வகுப்பு படிக்கும் இந்த இரு மாணவர்களுக்கும், ரம்யாகிருஷ்ணனுக்கும் இடையே பிரச்னை தொடர்கிறது இதனை அவர் எவ்வாறு சரிசெய்கிறார் மற்றும் இந்த பிரச்னை முடியும் முன்னரே 5வது கதைக்களத்தில் இவைகள் மூவருடன் மிஷ்கினும் இணைந்து என்னவெல்லாம் நடக்கிறது இந்த இந்து கதைகளிடையே நடந்த அணைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டனவா எனபதை கதைக்களமாக வைத்து இயக்கியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் “தியாகராஜன் குமாரராஜ்”.

திரைவிமர்சனம்

இந்த படம் கண்டிப்பாக தியாகராஜனின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என்பதில் மற்றம் இல்லை. வாழ்வின் தத்துவத்தை இந்த படத்தில் மிகவும் அருமையாக எடுத்து கூறியுள்ளார். அதேபோல் படத்தில் திருநங்கைகளின் பெருமைப்படுத்தும் விதமாக கதைக்களம் அமைத்துள்ளார் அது மிகவும் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கென ஒரு அங்கீகாரம் வழங்கும் விதமாக கட்சி படுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சமந்தாவின் வேம்பு கதாபாத்திரத்தை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகள் பண்ணாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி தனது நடிப்பு திறமை இந்த படத்தில் மீண்டும் பதிவேற்றியுள்ளார் அதேபோல் திருநங்கை, சொட்டை தலை கதாபாத்திரம் என தனது மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரை அடுத்த விக்ரம் என்றே கூட கூறலாம்.

மேலும் பாஹத் பாசில், ரம்யாகிருஷ்ணன், மிஸ்கின் போன்ற அணைத்து நட்சத்திங்களும் மற்றும் நடிகைகளும், நடிகைகளும் தங்களது நடிப்பை திறமையுடன் வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா ட்ரைலரிலேயே உங்கள் அனைவர்க்கும் தெரிந்திருக்கும் இசை எவ்வாறு உள்ளது என்று. அதே போல் தன படத்தின் பின்னணி இசை அனைத்தும் மிகவும் அருமையாக அமைத்துள்ளார்.

மொத்தத்தில் ஒரு power packed movie என்று கூறலாம். இந்த weekendற்க்கு மிகவும் விருந்தாக இந்த படம் அமைத்திருக்கும் என்று நம்புகிறோம்.

மதிப்பெண்
மொத்தத்தில் இந்த படத்திற்கு சினிபுக் 5க்கு 3.2கொடுக்கிறது.

Cast

Vijay Sethupathi, Fahadh Faasil, Samantha Akkineni, Ramya Krishnan, Mysskin, Gayathrie, Ashwanth Ashok Kumar, Abdul Jabbar, Vijay Ram, Noble K James, Jayanth, Naveen, Mirnalini Ravi, Kavin Jay Babu

Crew

Directed by Thiagarajan Kumararaja
Produced by Tyler Durden And Kino Fist
Thiagarajan Kumararaja | S D Ezhilmathy
In Association With
East west Dream works & Alchemy Vision Workz
Written by Thiagarajan Kumararaja | Mysskin | Nalan Kumarasamy |
Neelan K. Shekar
Music Composed & Arranged by Yuvan Shankar Raja
Recorded & Mixed by M.Kumaraguruparan @ U1 Records
Cinematography P. S. Vinod | Nirav Shah
Edited by Sathyaraj Natarajan
Art Director Vijay Aadhinathan
Sound Design – Tapas Nayak
Sound Effects Design – Arun Seenu
Colorist G.Balaji
Production Controller Arun Arunachalam
Costumes S D Ezhilmathy
PRO Nikil
Publicity Designs Gopi Prasannaa
Executive Producers Sathyaraj Natarajan & Swathi Raghuraaman
Distribution Partner: YNOTX

Leave a comment