ரஜினி,விஜய் ஒரே மேடையில் – சன் பிச்சர்ஸ் அதிரடி முடிவு !!!!!!
சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிக்கொண்டியிருக்கும் படங்கள் சர்கார் மற்றும் பேட்ட. இந்த இரண்டு படங்களுமே இரண்டு முன்னணி நடிகரான விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வருகின்றனர். இந்த இரண்டு படங்களின் அப்டேட்டையும் ஒரே நாளில் ஒரே மேடையில் நிகழ்த்த சன் பிச்சர்ஸ் நிறுவனம் தீர்மானித்து வருகிறது……..
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் சர்க்கார் . இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அதே போல கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் தான் பேட்ட. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு சில நாட்களுக்கு முன்னாடி தான் வெளியாகி சில மணி நேரங்களில் மில்லியன் வியூஸ் போச்சுன்னு பார்த்துக்கோங்க. இந்த இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்று அவர்களிடையே ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.
இதற்கிடையே, சன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த இரண்டு படங்களின் நிகழிச்சியை ஒரே நாளில் நடத்த திட்டமிட்டுள்ளது . அதன்படி அடுத்த மாதம் 2 ஆம் தேதி (அக்டோபர் 2 ) அன்று விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் இசை வெளியிட முடிவுச் செய்துள்ளனர். அதே நாளில் ஒரே மேடையில் ரஜினியின் பேட்ட படத்தின் டீசரும் வெளியிட போவதாக கூறப்படுகிறது.
சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதற்கான வேலைகளை மும்பரமாக பார்த்து வருகிறதாம். மேலும், ஒரே மேடையில் விஜய், ரஜினி இருவரையும் அமர செய்யுள்ளனர். இதனால், ஒரு கல்லில் இரண்டு மாங்கா என்பது போல, இரண்டு நடிகர்களுக்கும் நிறைய ரசிகர்கள் இருப்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும், படத்தின் எதிர்பார்ப்பும் கூடும், அதுமட்டுமா??? சன் டிவி இதை ஒளிபரப்புவதால் சன் டிவி டிஆர்பியும் எகிறும். நல்ல வசூல் ஆகும் என கணக்குப் போட்டு தான் இவ்வாறு செய்ய சன் பிச்சர்ஸ் முடிவுச் செய்துள்ளது. விரைவில் சன் டிவி மூலம் இரண்டு படங்களின் அப்டேடையும் பார்க்கலாம்……..