
summer skin care tips
கோடையில் வாடும் சருமத்தை எப்படி பாதுகாப்பது??
How to protect our skin in summer ????
கோடைக்காலம் தொடங்கி அநேக இடங்களில் வெயில் சும்மா பட்டையை கிளப்பி வருகிறது. அனைத்து இடங்களிலும் இந்த வருடம் கோடை வெயில் சற்றுக் கூடுதலாகவே உள்ளது. கோடை காலத்தில் நம் உடலுக்கும், நம் மேனிக்கு சரி சோர்வு ஏற்படும். நம் சருமத்தை கோடை வெயிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பதை பார்க்கலாம் வாங்க..
- கோடை காலமாக இருந்தாலும்,வெயில் காலமாக இருந்தாலும் முதலில் நம் சருமம் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். நம் சருமம் விரைவில் சுருக்கம் ஏற்பட்டு இளமை போய்விடும். எனவே அந்த பிரச்சனையில் இருந்து நாம் நம் சருமத்தை பாதுகாப்பது கொள்வது மிகவும் அவசியம்.
- கோடைக்காலங்களில் பொதுவாக அடிக்கடி முகத்தை வெறும் தண்ணீரில் கழுவ வேண்டும். சோப்பு அதிகம் பயன்படுத்தக்கூடாது. நாம் முகத்தை அடிக்கடி கழுவினால் நம் முகத்தில் உள்ள கிருமிகள் நீங்கி முகம் பொலிவாகும்.
- எலும்பிச்சை சாறுடன் பன்னிர் சிறிதளவு மற்றும் சுத்தமான மஞ்சள் சிறிதளவு கலந்து தினமும் முகத்தில் பூசி வர சருமம் பொலிவடையும்.
- வறண்ட சருமமாக இருப்பவர்கள் கோடை காலத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசினால், முகம் பொலிவுடன் காணப்படும். மேலும், முக சுருக்கங்கள் நீங்கும்.
- இந்த கோடை காலத்தில் நம் உடல் வேர்வையில் உடல் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பை போக்க நம் உடலை பாதுகாக்க நாம் தினமும் குளிக்கிற நீரில் வேப்பிலை போட்டு குடிக்க வேண்டும். அப்போது தான் நம் உடலில் உள்ள அலர்ஜி மற்றும் அரிப்பு சரியாகும்.
- வெயில் காலத்தில் நம் கண்களுக்கும் சோர்ர்வு ஏற்படும். கண் எரிச்சல் அதிகமாக இருக்கும் . நாம் கண்களை அடிக்கடி சுத்தமான நீரில் கழுவ வேண்டும். மேலும், கண் எரிச்சலுக்கு வெள்ளரிக்காய் சிறு துண்டுளாக கட் செய்து கண்ணில் வைத்து கொஞ்சம் நேரம் கழித்து எடுத்தால் கண் எரிச்சல் சரியாகும்.
- கோடைக் காலத்தில் பெண்கள் அதிகம் அழகு சாதனா பொருட்கள் பயன்படுத்த வேண்டாம். அப்படியே பயன்படுத்தினாலும் நல்ல தரமான அழகு சாதன பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஏன் என்றால் கோடைக்காலத்தில் கண்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும்.
- கோடைக்காலத்தில் நம் உடலில் நீர்சத்து குறைப்பாடு இருக்கும். உடலில் நீரின் அளவு குறைவதால் உடலுக்கு மட்டும் அல்ல நம் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும். அதனால், முக்கியமாக கோடைக்காலங்களில் நாம் அதிக தண்ணீர் அருந்துவது மிக முக்கியம். மேலும், நாம் ஆரோக்கியமான உணவு முறையும் நம் மேனியை பாதுகாக்கும். கோடைக்காலத்திற்கு ஏற்றார்போல நம் உணவு முறையை பின்பற்ற வேண்டும். அதிக நீர்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் என நாம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மிக மிக முக்கியம்…
- மேலே சொன்ன அனைத்தையும் பின்பற்றினால் எந்த வகை சருமமாக இருந்தாலும் எந்த பிரச்சனையும் வராது.