இப்படியும் ஒரு போராட்டமா? நீங்களே பாருங்களேன்!!!!!!

புதுமண தம்பதியினர் கலந்துக்கொண்ட நூதன போராட்டம்!!!!!!

தூத்துககுடியில் ஸ்டெர்ட்லைட்டை மூடக்கோரி கடந்த 64-ஆவது நாட்களாக மக்கள் போராடிவருகின்றார். சிறு குழந்தை முதல் பெரியவர் வரை போராட்டத்தில் கலந்துக்கொண்டு இன்று வரை போராடி வருகின்றார். இந்த போராட்டத்தில் நேற்று நடந்த போராட்டம் அனைவரையும் கவனிக்க வைத்தது. அப்படி என்ன போராட்டம் என்று யோசிக்கிறாங்களா? தூத்துக்குடியில் திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி இவர்களுக்கு நேற்று காலை திருமணம் முடிந்தது.

திருமணம் முடிந்த உடனே பனிமய ஆலயத்தின் முன்பே நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் புதுமணத்தம்பதினார் கலந்துக்கொண்டு “மீசையைமுறுக்கு ஸ்டெர்லைட்டை நொறுக்கு” என்று ஸ்டெர்லைட்டு எதிராக கோசம் எழுப்பினர். இவர்கள் மட்டும் இல்லலாமல் கல்யாணத்துக்கு வந்தவர்கள் தம்பதினரின் உறவினர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.

இந்த போராட்டம் அனைவருடைய கவனத்தை ஈர்த்தது என்று  சொல்லலாம். அந்த புதுமண தம்பதினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு அவர்கள் உடைய சமூக அக்கரைக்கு ஒரு பெரிய பாராட்டு கொடுக்கலேமே!!!!!!போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் !!!!!!