சிம்புவின் பெரியார் குத்து அரசியல் பாடல்- வைரலாகி வருகிறது !!!!!!

நடிகர் சிம்பு சில நாட்களாகவே படங்களில் நடிப்பதை விட அரசியல் ரிதியாக காவிரி பிரச்சனை போன்ற சமூக நலன் கருதி பேசி சர்ச்சைக்கு உள்ளாகிறார் என்பது அனைவரும் அறிந்தவை.  தற்போது சிம்பு பாடிய பெரியார் குத்து ஆல்பத்தின் டீஸர் மற்றும் அவர் பாடிய மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் சிம்புவுடன் சேர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , அரவிந்த் சாமீ மற்றும் அருண் விஜய் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே சிம்பு தனியாக “பெரியார் குத்து” என்ற ஆல்பம் தயாரித்து வருகிறார். பெரியார் குத்து ஒரு அரசியல் சம்பந்த பட்டவை. பெரியார் குத்து என்ற பாடலை எழுதியவர் மதன் கார்க்கி, சிம்பு அந்த பாடலை பாடி ஆல்பமாக வெளியிட திட்டமிட்டு உள்ளார்.  மேலும் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்து உள்ளார். தற்போது, சிம்பு பாடிய பெரியார் குத்து ஆல்பத்தின் டீஸர் மற்றும் அவர் பாடிய மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

You may also like...