சிம்புவின் அடுத்த படம் ரீமேக்கா??? கேத்தரின் ஜோடியா???

wait loading cinibook video

சிம்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளார் எனலாம். அந்த அளவுக்கு அவர் நிறைய சர்ச்சைக்கு உட்பட்டு படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க்கது. இதனால் சிம்பு ரசிகர்களும் இடையில் வருத்தத்தில் இருந்தனர். இப்படி இருக்கும் பட்சத்தில் அவர் நடிப்பில் இன்று வெளியான செக்க சிவந்த வானம் படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிம்புவும் இந்த படத்தில் நடிப்பில் தூள் கிளப்பி உள்ளார்.

சிம்புவின் அடுத்த படம் ரீமேக்கா??? கேத்தரின் ஜோடியா???

சிம்பு ரசிகர்கள் கொண்டாடத்தில் இருக்கும் இந்த சமயத்தில் சிம்புவின் அடுத்த படத்தை பற்றிய ஒரு செய்தி வெளிவந்து ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது எனலாம். அதாவது, தெலுங்கில் 2013 இல் பவர்ஸ்டார் “பவன்கல்யாண்” நடிப்பில் வெளிவந்த வெற்றி படமான “அட்டாரிண்டிகி தாராடி” படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்ய லைக்கா நிறுவனம் உரிமை பெற்றுள்ளது. இந்த ரீமேக் படத்தில் தான் சிம்பு நடிக்க போவதாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் இந்த படத்தில் இரண்டு நடிகை உள்ளனர். சிம்புவுக்கு ஜோடி” என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் நடித்த “மேகா ஆகாஷ்” இந்த படத்தில் சிம்புவுடன் டூயட் படா உள்ளார். மேலும், தெலுங்கில் ப்ரீனிதா கதாபாத்திரத்திற்கு பதிலாக தமிழ் வெர்சனில் நடிக்க கேத்தரின் தெரசாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் எனவும், படத்தின் வேலைகள் விரைவில் ஆரம்பமாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்…… இந்த செய்தியினால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்……

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *