செம்ம படத்தின் திரைவிமர்சனம் , ஜிவி பிரகாஷ், அர்த்தனா பினு, வாலிகாந்த், இயக்கம் பாண்டிராஜ்

wait loading cinibook video

நாச்சியார் படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ்ற்கு இந்த மாதம் வெளிவந்த “செம்ம” படத்தின் திரைவிமர்சனத்தை பார்க்கலாம். படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி ஸ்கிரிப்டாம் படத்தின் கதை, இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் விக்ராந்த்தின் நண்பர் திருமணவிழாவில் நடந்த உண்மை சம்பவமாம் அதை மெருகேற்றி முழுப்படமாக வெளிவரவிருக்கிறது “செம்ம”. மேலும் இந்த படத்தில் புதுமுக நடிகையாக அர்த்தனா பினு நடித்திருக்கிறார் மற்றும் யோகிபாபு, கோவை சரளா, சுஜாதா சிவகுமார் ஆகியோர்களும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதைக்களம்

நாயகன் ஜிவிபிரகாஷ்க்கு பொண்ணு பாக்குறாங்க இந்தாங்க கதையே. அவருக்கு எவ்ளோ பொண்ணு பாத்தும் ஒன்னும் அமையாம தட்டி போயிட்டே இருக்குக்கு, இதனால ஒரு ஜோதிடர் அவர் ஜாதகத்தை பாத்து பொண்ணு எப்போ அமையும்னு கேட்குறாங்க அங்க என்னடானா அவர் ஒரு குண்ட போடுறாரு இன்னும் 6மாதத்துக்குள்ள பொண்ணு பாத்து கல்யாணம் முடிச்சாகனும் இல்லைனா அடுத்து 6வருடத்துக்கு கல்யாணம் பண்ண கூடாதுனு சொல்ல. நாயகன்க்கு ரொம்ப ஷாக் ஆகிடுது இந்த விரக்தில நாயகன் 93வது தடவையா தற்கொலைக்கு முயற்சி செய்றரு அப்புறம் நம்ம நாயகி அவருக்கு பொண்ண அமஞ்சுடுறாங்க. இதுக்கப்புறம் இவங்க கல்யாணத்துல ஒரு ட்விஸ்ட் நடக்குது இறுதியா கல்யாணம் நடந்துச்சா இல்லையா என்பது தான் படத்தின் மொத்த கதைக்களம்.

திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவிலேயே ரொம்ப பழைய கதைய தேர்தெடுத்திருக்கிறார் இயக்குனர் வல்லிகாந்த். திரைக்கதையும் ரொம்ப சுமார் தான். டார்லிங் படத்துக்கு பிறகு ஜிவிபிரகாஷ் ரொம்ப பெரிய ஹிட் ஒன்னும் கொடுக்கல இவருக்கு இசை துறை ரொம்ப நல்ல இருக்கு இந்த படத்துல “சண்டாளி” ன்னு ஒரு நல்ல ஹிட் Song  ஒன்னு கொடுத்துருக்காரு அதையே நல்ல செய்யலாம் தோணுது. படத்துல யோகி பாபு காமெடி கொஞ்சம் பரவாயில்ல அவரும் இல்லனா இன்னும் ரொம்ப போர் தான். மொத்தத்துல இந்த படம் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கதை, கொஞ்சம் அதிகமா இசைன்னு ஒருதடவை மட்டும் பார்க்கக்கூடிய படம்.

Ratting

இந்த படத்துக்கு சினிபுக் 5க்கு 1.7 ரேட்டிங் வழங்குகிறது.

Movie cast and crew

Directed by Valliganth
Produced by Pandiraj
Ravichandran
Written by Pandiraj
Starring G. V. Prakash Kumar
Arthana Binu
Music by G. V. Prakash Kumar
Cinematography Vivek Anand
Edited by Pradeep E Ragav
Production
company
Linga Bairavi Creations
Pasanga Productions
Release date

 25 May

Country India
Language Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *