சீதக்காதி படம் மக்களை கவர்ந்த…. வாங்க பார்ப்போம்…!!!

wait loading cinibook video

    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்த சீதக்காதி படம் இன்று வெளிவந்துள்ளது. இப்படம் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற கதையிலிருந்து சீதக்காதி என்ற தலைப்பை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.

 

இயக்குனர் தரணீதரன் இதற்கு முன்னாள் விஜய் சேதுபதி வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர். இப்படம் இரண்டாவது படம். சரி, சீதக்காதி படம் முதல் படத்தை(நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்) போல காமெடி படமா?? இல்லையா?? என்று பார்ப்போம் வாங்க…..

கதைக்கரு:-

கலையை மிகவும் நேசிக்கும் ஒரு உண்மையான கலைஞானக அய்யா ஆதிமூலம்(விஜய்சேதுபதி)
நடித்துள்ளார். அய்யா அவர்கள் சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்துவருகிறார். அவர் தன வாழ்நாள் முழுவதும் மக்கள் முன்னிலையில் உண்மையான நடிகராக இருக்க ஆசைப்பட்டு, சினிமாவில் வாய்ப்பு நிறைய வந்தும் அதை ஒதுக்கிவிடுகிறார். தன வாழ்நாள் முழுவதும் மக்கள் முன்பு நேரடியாக நடிக்கவேண்டும் ஒரே கொள்கையுடன் இருந்தவர். ஒரு கட்டத்தில் சினிமாவில் மறைமுகமாக நடிக்க தொடங்கிறார். அவர் எப்படி சினிமாவிற்குள் நுழைகிறார் என்பதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது அதை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்…. சினிமாவில் அய்யா அவரின் உணர்ச்சிகளை மதிக்க வில்லை, சினிமா துறையைச் சார்ந்த வியாபாரிகள். இதை தான் அழகா சொல்லி உள்ளார் இயக்குனர் பாலாஜி.

திரைவிமர்சனம்:-

முதலில் இப்படி ஒரு தைரியமாக எடுத்தக்கொண்டு வந்ததற்கு நன்றிகளும், பாராட்டையும் சொல்லிவிடலாம். சினிமாவில் மறைமுகமாக நடக்கும் போலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.


படத்தில் விஜய் சேதுபதி 70 வயது முதியர்வாகவே மாறி நடித்துள்ளார். அப்படி ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சிறிய ரோலில் இப்படி வயதான கதாபாத்திரம் எடுத்து நடிப்பார்கள், ஆனால் படம் முழுவதுமே விஜேசேதுபதி முதியவர் கதாபாத்திரத்தை ஏற்று முதியவர்கவே தோற்றத்திலும் சரி, நடிப்பிலும் சரி, அப்படியே அசல் 70 வயது முதியர் போலவே தோணுது படத்தை பார்க்கும் போது. படம் ஆரம்பத்தில் மெதுவாக செல்கிறது. இரண்டாவது பாகத்தில் வரும் சுனில் விஜய்சேதுபதிக்கு வில்லனாக வருகிறார். அவர் நடிப்பில் பின்னியுள்ளார். படத்தில் காமெடி கொஞ்சம், எமோஷனல் அதிகம். கொஞ்ச நேரம் காமெடிய என்றாலும் செமையாக அமைந்துள்ளது. படத்தில் இசை ரொம்ப பக்கபலமாக இருந்தது எனலாம். அந்தளவுக்கு படத்தில் இசை அம்சமா அமைத்துள்ளார் கோவிந்த் வசந்த். விஜய்சேதுபதி அவுரங்கசீப் நாடகத்தில் 10 நிமிடங்கள் நடிப்பார். அதில் உண்மையில் அவருக்கு நிறைய கிளாப்ஸ் வந்தது திரையரங்கில்.

படத்தில் இயக்குனர் சொல்ல வந்த கதை உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம். அதை சொல்லிருந்த விதம் கொஞ்சம் சலிப்படைய வைத்தது எனலாம். படம் ரொம்ப மெதுவாக செல்வது போல தோன்றிகிறது. படத்தின் நேரத்தை 3 மணி நேரம் இல்லாமல் கொஞ்சம் குறைத்திருக்கலாம். கொஞ்சம் விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் சீதக்காதி அனைவரும் சென்று பார்க்க வேண்டிய படம்…சினிமாவில் நடக்கும் விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் இயக்கும்பர் பாலாஜி.

You may also like...