Seemaraja Movie Review – Sivakarthikeyan, Samantha, Soori

wait loading cinibook video

கதைக்களம்

ராஜவம்சத்தை சேர்ந்த சிங்கப்பட்டி சீமராஜா தனது ராஜ கௌரவத்தை மீட்டெடுக்க முயல்வது தான் ’சீமராஜா’ படத்தின் கரு. ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இயக்குநர் பொன்ராம் ஆகியோர்கள் இணைத்து வெளிவந்துள்ள மூன்றாவது படம் ’சீமராஜா’.

திரைவிமர்சனம்

வழக்கம் போல நகைச்சுவை காட்சிகள் மிகவும் தரமாக தயாராகியுள்ளது. டீச்சராக வரும் சமந்தாவின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது, சிவகார்த்திகேயன் சிம்ரனின் நெகடிவ் கதாபாத்திரம் படம் முழுவதும் தெறிக்க விடுகிறது. மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் லால் இருந்தபோதிலும், ’சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயன் – சிம்ரன் காம்போ தான் பிரதானம். இதற்கிடையில் சூரி அடிக்கும் லூட்டிகளும் ரசிக்க வைக்கின்றன.

சதீஷ் காமெடியை விட சிவகார்த்திகேயன் மற்றும் சூரியும் இணைத்து கலக்கும் டைமிங் காமெடி தான் அதிகளவில் கைகொடுத்துள்ளது. இவர்கள் கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள “மனம் கொத்திப் பறவை”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “மான் கராத்தே”, “ரஜினி முருகன்” போன்ற படங்கள் வெளிவந்து காமெடியிலும், வசூலிலும் கலக்கு கலக்குனு கலக்கின.

படத்தில் இமான் இசையமைத்துள்ளார், பொதுவாக சிவகார்த்திகேயன் என்றாலே பாடல்கள் அனைவரையும் சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும் குறிப்பாக காதலர்கள் மற்றும் சிறுவர்களை மையப்படுத்தி தான் அதிகமான பாடல்கள் அமைத்திருக்கும். அதே வகையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் நன்றாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் இமான்

படத்தின் வீடியோ பாடல்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன :

Varum aana varathu video song : Click Here

Onnavitta Yaarum Yenakilla Video Song : Click Here

Machakanni Video Song : Click Here

Paraak Parrak Video song : Click Here

மதிப்பெண்

சினிபுக் 5க்கு 2.8 கொடுக்கிறது

You may also like...