மழை வாசனைக்கு பின்னனியில் மறைந்துள்ள அறிவியல் உண்மை…….!!!!

wait loading cinibook video

மழைக் காலங்களில் மழை பெய்யும் போது, அனைவருக்குமே ரொம்ப சந்தோசமாக இருக்கும். அதுமட்டும் இல்லங்க, மழை பெய்யும் போது மழை வாசனை வருகிறது அல்லவா….???? அந்த மழை வாசனை புடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மழை வாசனை அனைவரும் கவரும் வகையில் ரொம்ப சூப்பரா இருக்கும்… இப்படி அனைவருக்கும் புடித்த இந்த மழை வாசனை எப்படி வருகிறது….அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன???? என்று சில அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளனர்.

மழை வாசனைக்கு பின்னனியில் மறைந்துள்ள அறிவியல் உண்மை.......!!!!

 

 

மழை வாசனைக்கு பின்னனியில் மறைந்துள்ள அறிவியல் உண்மை.......!!!!

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நல்ல வாசனை வருவதற்கு காரணமாக இருப்பது பாக்ட்ரியா. மழை இல்லாமல் வறண்டு கிடைக்கும் பூமியில் மழை பெய்யும் போது, நல்ல மழை வாசனை வருவதற்கு காரணம் மண்ணில் உள்ள பாக்ட்ரியா என்று ஆராய்ச்சி செய்து ஜான் இன்நெஸ் மையத்தின் மூலக்கூறு நுண்ணுயிரியியல் துறை பேராசிரியருமான மார்க் பட்னர் வெளியிட்டுள்ளார்.

மழை வாசனைக்கு பின்னனியில் மறைந்துள்ள அறிவியல் உண்மை.......!!!!

 

என்னது மழை வாசனைக்கு காரணம் பாக்ட்ரியாவா??? அது எப்படி???. அது என்ன பாக்ட்ரியா???    ஆக்டினோமைசீஸ் அல்லது ஸ்டிரெப்டோமைசீஸ் என்ற பாக்ட்ரியா மழை வாசனைக்குக் காரணம்.  என்ற  ஸ்டிரெப்டோமைசீஸ் பாக்ட்ரியா பொதுவாக நல்ல ஆரோக்கியமான மண்ணில் தான் அதிகம் இருக்குமாம். இந்த பாக்ட்ரியா ஆன்டிபயாடிக் மருந்துகளை தயாரிக்க பெரிதும் உதவுகிறது. இப்படி நல்ல பாக்ட்ரியாவாக இருக்கும் ஸ்டிரெப்டோமைசீஸ் மழை பெய்யும் போது, மழை துளி உடன் சேர்ந்து ஜியோஸ்மின் மற்றும் 2-methyl isoborneol என்ற கூட்டுப்பொருளை வெளியிடுகிறது. இதுவே மழை வாசனைக்கு காரணமாக உள்ளதாம். மேலும் இந்த ஸ்டிரெப்டோமைசீஸ் என்ற பாக்ட்ரியா வறண்ட கதகதப்பான மண்ணில் அதிகமாக இருக்குமாம் உதாரணத்திற்கு ஒரு சிட்டிகை அளவு பல ஆயிரம் ஸ்டிரெப்டோமைசீஸ் என்னும் பாக்ட்ரியா இருக்குமாம். அதனால், தான் மழை வாசனை வருகிறது.

 

Leave a comment

You may also like...