முரட்டு குத்து படத்திற்கு பிறகு சந்தோஷின் அடுத்த படம் என்ன தெரியுமா???

சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் நல்ல வசூலை பெற்றது என்றே சொல்லலாம். முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி கொண்டுஇருக்கிறாராம். ஆம், அவருடைய அடுத்த படத்தின் தலைப்புக்கூட தற்போது கைவசம் உள்ளதாம். அந்த படத்திற்காக முன்னணி நடிகர் மற்றும் நடிகையிடம் பேசிக்கொண்டுஇருக்கிறாம். இன்னும் யார் யார் நடிக்க உள்ளனர்…??? என்பது தெரியவில்லை.


தற்போது ,சந்தோஷ் தன்னுடைய அடுத்த படத்தின் தலைப்பு மட்டும் அறிவித்துள்ளார். படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக தான் உள்ளது. தலைப்பு என்னவென்றால், “ஸ்டார்ட் கேமரா ஆக்சன்”.. இதற்க்கு முன்னாள் சந்தோஷ் இயக்கிய படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்திலும் என்னுடன் பணிபுரிவார்கள் என்று அறிவித்து உள்ளார்.

“ஹர ஹர மஹாதேவகி”, “இருட்டு அறையில் முரட்டு குத்து” மற்றும் “கஜினிகாந்த்” போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த சந்தோஷின் அடுத்த படத்தையும் வெற்றி படமாகவே வித்தியாசமான கதைக்களத்துடன் அமைத்துக்கொடுப்பர் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு….

You may also like...