சிம்ட்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா??? இதோ உங்களுக்காக ….!!!!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்க்கார். இப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மக்களிடையே. ரகுமான் இசையில் நேற்று (sep 24) மாலை வெளியான சிம்ட்டாங்காரன் பாடல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. அந்த பாடல் வெளியாகி இதுவரை 47 லட்சம் வியூர்ஸ் யூடியூபில் பார்த்துள்ளனர். 4.6 லட்சம் லைக்ஸ் மற்றும் லட்சக்கணக்கான கமெண்ட்ஸ் வந்துள்ளன.


பாடல் வெளிவந்ததும் அதிக கமெண்ட்ஸ் தான் வந்ததாம். பாடல் வரிகள் ரொம்பவே வித்தியாசமாக சென்னை லோக்கல்  மொழியாக இருப்பதால், அனைவரும் இந்த பாடல் தமிழ் மொழியா???? என்றே பலருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னைவாசி மக்களுக்கே இந்த பாடலில் பல வரிகள் புரிவில்லை என்றால் பாருங்கள்…. பாடல் ஆரம்பமே புரியலயாம் சென்னைவாசி மக்களுக்கு……

 

அதனால், பாடல் கேட்ட அனைவரும் பாடலாசிரியர் விவேக் அவரை கேலி செய்யும்படி கமெண்ட் பண்ணியுள்ளனர். அதற்கு விவேக் சிம்ட்டாங்காரன் என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன் மற்றும்  துடுக்கானவன் என வரிசையாக சொல்லுகிறார்.

பாடலாசிரியர் விவேக், விரைவில் பாடலின் அணைத்து வரிகளுக்கும் இதே போல விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், பாடல் முழுவதுமே அப்படிதான் புரிந்த வகையில் உள்ளது. பாடல் புரியாமல் இருந்தாலும், அதிக மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்றால், அதற்க்கு காரணம் ரகுமான் இசை தான்.

 

You may also like...