சர்கார் படம் ஒரு கு — படம்??? படத்திற்கு ப்ரீ ப்ரோமோஷன் கிடையாது அறிவித்த பா.ஜா.கா பிரபுகர்..

சர்கார் படத்தின் இசை வெளியீட்டின் போது விஜய் பேசியது தொடர்ந்து அரசியல்வாதிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.  சர்கார் படம் வரும் தீவாளிக்கு வெளியிட போவதாகக் கூறி வருகின்றனர். இந்நிலையில் சர்க்கார் படத்திற்கு ப்ரீ ப்ரோமோஷன் கிடையாது என்று பா.ஜா.கா பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

பா.ஜா.கா.பிரமுகர் எஸ்.ஆர்.சேகர்  அவர்கள் சர்கார் படத்தை பற்றி நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க போவது இல்லை. ஏன் என்றால்??? சர்கார் ஒரு குப்பைப் படம் .  அதனால் அந்த குப்பையை நாங்கள் கிளற விரும்ப வில்லை , என்று சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் கோவத்தில் உள்ளனர்.


பா.ஜா.கா.பிரமுகர் எஸ்.ஆர்.சேகர்  இவ்வாறு சொல்ல காரணம், இதற்கு முன்னாள் விஜய்யின் மெர்சல் படம் இதே போல சர்ச்சையில் சிக்கி பேசப்பட்டது. அதிலும் பா.ஜா.கா பிரபுகர் தமிழிசை முதல் கொண்டு அனைவரும் எதிப்பை தெரிவித்தனர். ஆனாலும் அப்படம் வெளியாகி வரலாறு சாதனை படைத்தது எனலாம். அந்த அளவுக்கு வெளிநாடுகளிலும் பேசப்பட்டது.

 

இதற்கு காரணமே சர்ச்சைக்கு உள்ளாகி பேசப்பட்டது தான். சமூக வலைத்தளங்களில் கூட மெர்சல் வெற்றிக்கு பா.ஜா.கா தான் காரணம் என்று கிண்டலாக தெரிவித்தனர். பா.ஜா.கா மெர்சலுக்கு ப்ரீப்ரோமோஷன் செய்துள்ளனர் என்றும் கிண்டல் செய்தனர் பலரும். இந்த காரணத்தினால் தான் முன்கூட்டியே சேகர் சர்கார் படத்திற்கு ப்ரீப்ரோமோஷன் கிடையாது என்று தெரிவித்துள்ளார்…….

You may also like...